Tuesday 31 December 2013

மதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்துக்கள். . .நாட்காட்டியின் புத்தாண்டு வாழ்த்து
நாட்கள் தவறாமல்
நாட்காட்டியை கிழித்து
புத்தாண்டிற்கு விழாயெடுக்கும்
இளைஞர்களை கேட்கிறேன்..!!!! 
எனை கிழித்ததை தவிர
ஓராண்டில் - நீங்கள்
முடித்த கடமைகலென்ன..? 
உயிரில்லை என்றாலும் - நான்
உற்று நோக்குகிறேன்
உணர்வில்லா இளைய சமூகத்தை..!! 
கடமையை முடிக்காமல்
நானுறங்கியதில்லை
உறங்கியதை தவிர
நீங்கள் செய்ததென்ன ..? 
கிழித்ததென்னவோ காகிதம்
கிழிந்ததென்னவோ நானில்லை
உன் வாழ்க்கையிலோர் பக்கம்..!!! 
வீசியதென்னவோ குப்பையில்
வீழ்ந்ததென்னவோ நானில்லை
உன் எதிர்காலம் லட்சியம்..!!! 
வலைத்தள நண்பர்களுடன்
அரட்டை அடிப்பதே கடமை
அறிவை வளர்ப்பதல்ல..!!!
காதலை தேடுவதே கடமை
கல்வியில் சிறந்து
நாட்டை வளர்ப்பதல்ல..!!! 
முகத்தின் அழகை காப்பது
கடமை
அழியும் இனத்தை காப்பதல்ல..!!! 
ஆனந்தமாக மதுவருந்தி
நாட்களை கடத்துவீர்
நாட்டின் நிலையறியாமல்..!!! 
உன் மொழி
உன் நாடு
உன் சமூகம்
இவையாவும் உன்னை நம்பி..!!! 
இளைஞனே சிந்தித்து
கடமைகளை முடி
இந்தியாவை முதன்மையாக்க..!!! 
அறிவுரை பிடிக்காது
இளைய சமூதாயத்திற்கு
ஆதலால் முடிக்கிறேன் உரையை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்.!!! 

என்றும் தோழமையுடன் ------S. சூரியன்..... மாவட்டசெயலர் 

Sunday 29 December 2013

30.12.2013 - நடக்க .. . .இருப்பவை . . .

ஒருங்கிணைந்த பணி நிறைவு பாராட்டு விழா 
நமது மதுரை மாவட்டத்தில் இம் மாதத்தில் (டிசம்பர் 2013) பணி நிறைவு செய்து ஓய்வு பெறும் மாவட்டம் முழுவதிலுமிருந்து  10 தோழர்களுக்கான,மாவட்ட அளவிலான 95 வது.ஒருங்கிணைந்த Farewell விழா 30.12.2013 காலை 11 மணிக்கு,மதுரை G.M அலுவலகத்தில் உள்ள மணமகிழ் மன்றத்தில் சிறப்பாக நடைபெறஉள்ளது. 
பணி நிறைவு பாராட்டு பெற உள்ள தோழர்கள்:
1 . தோழர்.M. பாலகிருஷ்ணன்,T.M, பொன்மேனி, மதுரை.
2 . தோழர்.R. கணேசன்,STS,தல்லாகுளம்,மதுரை.
3 . தோழர்.R. குமராண்டி,TM, பழங்காநத்தம்,மதுரை.
4 . தோழர்.M. முணியாண்டி ,SSS ,GM(O),மதுரை.
5 . தோழர்.R. ராஜேஸ்வரன் ,DFA ,GM(O),மதுரை.
6 . தோழர்.P. ராஜூ ,T.M , GM(O),மதுரை.
7 . தோழர்.A. ராமமூர்த்தி ,GM(O),மதுரை.
8 . தோழர்.G. ராமமூர்த்தி ,T.M,கீழ மாசிவீதி,மதுரை.
9 . தோழர்.P. திருமலைத்தாய் ,T.M , CSC / TKM,மதுரை.
10.தோழர்.A. வாசி, JTO , தேனி . 
இம் மாதம் பணி நிறைவு செய்து,ஓய்வு பெறும் அணைவரும் குடும்பத்துடன், எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக நீடுழி வாழ்க என நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
              என்றும் தோழமையுடன். . . . எஸ். சூரியன், மாவட்டசெயலர் -BSNLEU

13 லட்சம் அமெரிக்கர்கள் சலுகைகளை இழந்து விட்டனர்.

அமெரிக்காவின் அடுத்த இரண்டாண்டிற்கான பட்ஜெட்டில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். அதில் ஏற்கனவே அமெரிக்காவில் வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு என சிறப்பு நிவாரண திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை நிறைவேற்றப்பட்டுள்ள பட்ஜெட்டில் அந்த திட்டத்தை நீட்டிப்பு செய்யவில்லை. இதனால் 13லட்சம் அமெரிக்கர்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள். அமெரிக்காவின் அடுத்த இரண்டு ஆண்டிற்கான பட்ஜெட் மசோதா கடந்த செப்டம்பர் 31ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வில்லை. காரணம் ஓபாமாவின் ஜனநாயக கட்சி பெரும்பான்மையாக உள்ள செனட் சபையின் பட்ஜெட் குழுவினர் வைத்த பட்ஜெட்டிற்கு குடியரசு கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தரவில்லை. இதனால் பெடரல் அரசின் அலுவலகங்கள் 16 நாட்கள் இழுத்து மூடப்பட்டது. அதன் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கடன் உச்சவரம்பை உயர்த்துவது, ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்வற்றை இரு கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் அதற்கு மாறாக வேiயில்லாதவர்களுக்கு அமலாக்கப்பட்டு வந்த சிறப்பு வேலையில்லா கால நிவாரண திட்டம். பொதுச்செலவினங்களுக்கான நிதியை வெட்டி சுருக்குதல், ஓய்வூதியத்திற்கான பங்களிப்பு தொகையை உயர்த்துதல், அரசு கட்டணங்களை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சாதாரண மற்றும் உழைப்பாளி மக்கள் மீது தாக்குதலை தொடுத்திட இருகட்சிகளும் இணைந்து முடிவு செய்தன. அதன் பின்னர் பிரதிநிதிகள் சபையில் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது.இதில் அமெரிக்காவில் ஏற்கனவே வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு அரசு வாரத்துக்கு 300 டாலர் மற்றும் சில சலுகைகளை அளித்து வந்ததை நிறுத்தியுள்ளது. அந்த திட்டத்தை நீட்டிப்பு செய்வதற்கு நிதி ஒதுக்காமல் அப்படியே திட்டத்தை கைவிட்டு விட்டது. இதனால் இதுவரை வேலையில்லா கால சிறப்பு நிவாரணத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்த 13 லட்சம் அமெரிக்கர்கள் சனிக்கிழமையுடன் சலுகைகளை இழந்து விட்டனர்.இது பற்றி அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் ஜெனி ஸ்பெர்லிங் கூறும்போது, வேலையில்லா அமெரிக்கர்களுக்கு நிதி ஒதுக்க மறுப்பதால் அமெரிக்கர்களின் பொருளாதார நிலை மேலும் பாதிக்கப்படும். ஏற்கனவே வேதனையில் இருக்கும் அவர்கள் மேலும் துன்பத்துக்குள் தள்ளப்படுவார்கள். அவர்கள் நிலை அறிந்து அவர்களுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.