எதிர்க்கட்சிகள் மீது கொலைவெறி தொடர்கிறது; ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது; மக்களவைத் தேர்தலை நியாயமாக நடத்துக:
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு 2013 நவம்பர் மாதம் வரை 142 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இதில் இருவர் எம்எல்ஏக்கள் ஆவர். கடுமையாகக் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 7433. வன்புணர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல் களுக்கு ஆளான பெண்கள் 46 ஆயிரத்து 937 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக் கிறார்கள். இடதுமுன்னணி ஆதரவாளர்களின் 5547 வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. 302 கல்வி நிறுவனங்கள் தாக்கப்பட்டு, அதன் முதல்வர்கள், ஆசிரியர்கள் கூட கடும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.85க்கும் மேற்பட்ட மாணவர் சங்கங்களின் அலுவலகங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இடதுமுன்னணியைச் சேர்ந்த 4237 ஊழியர்கள் மீது பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கைது செய்யப்பட்டவர்களில் 1360 பேர் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். பிணையில் வந்தவர்கள்கூட தங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியாமல் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.இவர்கள் மீது போட்டுள்ள பொய் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 938 ஆகும்.விவசாயிகள் தங்கள் நிலங்களை உழ அனுமதி க்கப்படவில்லை. இடது முன்னணி ஊழியர்கள் தான் என்றில்லை, காங்கிரஸ் எம்எல்ஏ கூட கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.ஏன், தங்கள் சொந்தக் கட்சியின் அதிருப்தியாளர்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை. இவ்வாறு மேற்குவங்க மாநிலத்தில் மிகவும் மோசமான முறையில் பயங்கரவாத சூழ்நிலை மம்தா திரிமுனால் அரசு உருவாக்கி இருக்கிறது. இப்படி பட்ட கொலை வெறி தாக்குதலிருந்து மேற்கு வங்க மாநிலத்தை மீட்க வேண்டும். --தீக்கதிர்
No comments:
Post a Comment