Tuesday, 3 December 2013

நமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .

நவம்பர் 30 அன்று டெல்லியில் . . . .  
 BSNL நிறுவனத்தை  மேம்படுத்துவதற்காக அனைத்து சங்கங்களும் BSNL உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.BSNLன் வருவாய் பெருக்கப்படவேண்டும்.சில இடங்களில் உபகரணங்கள் இருந்தும் சேவை தரப்படாத  நிலை மாற்றப்பட வேண்டும்.செல்கோபுரங்களின் செயல்பாடு செம்மைப் படுத்தப்படவேண்டும்.தொலைபேசி துண்டிப்பு DISCONNECTION நிறுத்தப்பட வேண்டும்.2.5 லட்சம் ஊழியர்களும் நமது BSNL பொருட்களை விற்பனை செய்ய தயாராக வேண்டும்வருவாய் பெருக்கத்தில் பின் தங்கியுள்ள ஜார்க்கண்ட்சென்னை , கொல்கத்தா போன்ற மாநிலங்கள்  முன்னேறிட  தொழிற் சங்கங்கள் ஒத்துழைக்க  வேண்டும்அடையாளம் காட்டும் தொலைபேசிக் கருவிகளும் ,  கேபிள்களும் தேவைக்கேற்ற அளவு அந்தந்த மாநிலக்கிடங்குகளில் உள்ளன. அவற்றை பயன்படுத்துதல் வேண்டும்.மேற்கு பகுதிகளில் WESTERN ZONE வேண்டிய உபகரணங்கள் வாங்கும் பணி துரிதப்படுத்த படவேண்டும்.BSNL செல் கோபுரங்களை தனியாருக்கு வாடகைக்கு விட வேண்டும்.அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு விட வேண்டும்.மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.ENTERPRISE BUSINESS எனப்படும் நிறுவன சேவை வணிகம் மேம்படுத்தப்பட வேண்டும். LEASED CIRCUITS வாடகைச்சுற்றுக்கள் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.கிராமப்பஞ்சாயத்துகளை NOFN - NATIONAL OPTICAL FIBER NETWORK மூலம் இணைத்து இணையதள சேவை அளிக்கும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.முன்னேறியுள்ள 44 தொலைத்தொடர்பு மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் உபரியாக உள்ள கருவிகளை தேவையான இடங்களுக்கு பயன்படுத்திட வேண்டும்.BROAD BAND அகன்ற அலைவரிசை சேவையில் பழுதுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாய் குறைவு ஏற்பட்டு வருகின்றது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.வருவாயின் அடிப்படையில்  SSA எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும்.   

No comments: