Sunday, 29 December 2013

தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்ப முடியவில்லை.

ரயிலில் பயங்கர தீ விபத்து: 26 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் பெங்களூர்-நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூ ரில் இருந்து வெள்ளியன்று இரவு 10.45-க்குப் புறப்பட்டு, மகாராஷ்டிரம் மாநிலத்தின் நாண்டெட் வரை செல்லும் நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமையன்று அதிகாலை 3.20 மணியளவில் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம் கொத்தா செருவு என்ற இடத்தில் வரும் போது இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.ரயிலின் பி-1 குளிர்சாதன வசதிகொண்ட பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற பெட்டி களுக்கும் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து நடந்தது அதி காலை என்பதால், தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலராலும் தப்ப முடியவில்லை. இந்தத் தீயில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.முழுமையான மீட்புப் பணிகளுக்குப் பின் முழுவிவரம்தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ரயில்வே உதவி எண்கள்: ரயில் விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த விபரங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை அறிவித்தது. பெங்களூரு தொடர்பு எண்கள்: 080 22354108, 080 22259271, 080 22156551, 080 22156554. எஸ்.எஸ்.பி. நிலையம் எண்கள்: 085 552 80125 மற்றும் 097 31666863 இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து ரயில்வேப் பாதுகாப்பு ஆணையர் தலைமையில் 5 பேர்கொண்ட அதிகாரிகள் குழுவிசாரணை நடத்தும். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து இப்படி நடந்து கொண்டிருக்கும் விபத்துக்கள் நிகழாவண்ணம் அரசு இனியேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதே நமது வேதனையான கேள்வி.

No comments: