Tuesday 10 December 2013

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி . . .

டிசம்பர் 12 தில்லி பேரணி : தொழிலாளர்கள் குவிகிறார்கள்
மத்திய அரசின் மக்கள் விரோத - தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம்மேளனங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க நாடெங்கிலுமிருந்து தொழிலாளர்கள் தில்லியை நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்தில்லியில் டிசம்பர் 12 நடை பெறவுள்ள தொழிலாளர்களின் பிரம்மாண்டமான பேரணி குறித்து, சிஐடியுவின் அகில இந்திய தலைவர் .கே. பத்மநாபன் கூறியதாவது:’’இந்தியத் தொழிலாளி வர்க்கம் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வருகின்ற மக்கள் கோரிக்கைகளுக்கான இயக்கம் பிரம்மாண்டமான பேரணியோடு அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. டிசம்பர் 12 அன்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் - மத்திய- மாநில அரசு ஊழியர்கள் - தொலை தொடர்பு, இன்சூரன்ஸ், வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி யாற்றும் ஊழியர்கள் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புதுதில்லி, நாடாளு மன்றவீதிக்கு அணிவகுத்து வருகிறார்கள்.இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்குப் பிறகும், தொழிலாளி வர்க்கத்தின் அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு எழுப்பிய கோரிக்கைகளின் மீது ஒரு முறையான பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசு தயாராக இல்லாத சூழலில், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தக்கூடிய முறையில் இந்தப் பேரணிக்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.நாட்டின் பல மாநிலங்களி லிருந்தும், தொழிலாளர்கள் தில்லியை நோக்கிப் புறப்பட்டு விட்டனர்.முதல் குழுவினர் 9ஆம் தேதி இரவே தில்லிக்கு வந்து சேர்கின்றனர். பத்தாம் தேதி மாலையிலிருந்து ராம் லீலா மைதானத்தில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி ஆகியவை அமைத்துள்ள முகாம்கள்        செயல்பட இருக்கின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மண்டபங்கள், சத்திரங்களில் தொழிலாளர்களும் ஊழியர்களும் தங்குவதற்கான ஏற்பாடுகளை அவரவர்களது சங்கங்கள் செய்துள்ளன.இந்தப் பேரணியானது இரண்டாண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற பேரணியை விட அதிகமானதும் பல்வேறு அமைப்புகளின் பங்கேற்போடும் நடைபெறவிருக்கிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் அணிவகுத்து வருகின்றனர். கணிசமான அளவு பெண் ஊழியர்களும் பேரணியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடை பெற்று வருகின்ற வேளையில் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் தங்களது கண்டனத்தை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஒன்றுதிரள்கிறார்கள். நான்கு மாநிலங்களில் நடை பெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள் கைகளுக்கு எதிராக உழைப் பாளி மக்களின் இந்த பிரம் மாண்டமான பேரணி நடை பெறுகிறது.டிசம்பர் 12 அன்று காலை 9 மணிக்கு ராம் லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறும் இப்பேரணி தொடங்குகிறது. 11 மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும், தொழில் வாரியாக செயல்பட்டு வரும் தேசிய சம்மேளனங்களின் தலைவர்களும் இப்பேரணிக்குத் தலைமை ஏற்பார்கள் இவ்வியக்கத்தில் நமது BSNLEU சங்கமும்,தன்னை இணைத்து கொண்டுள்ளது.

No comments: