Wednesday 25 December 2013

டிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .

டிசம்பர் 25,. வெண்மணியின் 45-வது தினம். தேசத்தையே குலுக்கிய நாளது. 44 தலித் மக்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நிலச்சுவான்தார்களும், அவர்களது குண் டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற நாள். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட் டத்தில், குறிப்பாக கிழக்கு தஞ்சையில் பெரும்பகுதியாக இருந்த தலித் விவசாயத்தொழிலாளர்கள்நிலச்சுவான்தாரர்களால்விலங்குகளிலும்இழிவாகநடத்தப்பட்டனர்.கீழ்வெண்மணிப்படுகொலைகள் என்பது 1968 ஆம்ஆண்டு டிசம்பர்25 ஆம் நாள் தமிழ்நாடு நாகப்பட்டினம் வட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில்கீழவெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். இதன் போது 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.வேளாண் தொழிலாளிகளான இவ்வூர் மக்கள், தாங்கள் அறுவடை செய்யும் வயல்வேலைகளுக்கு கூலியாக தரும் ஒரு படி நெல்லில் இருந்து இரு படி நெல் தரவேண்டும் என வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்நிலக்கிழார்கள் இப்போராட்டத்தை ஒடுக்க, அடியாட்களை ஏவினர். அவர்கள் கீழ்வெண்மணிக்கு சென்று கலவரங்களில் ஈடுபட்டனர். கலவரத்தின் போது, பாதுகாப்பு தேடி ஒரு குடிசையில் ஒளிந்த இருபது பெண்களும், 19 குழந்தைகளும் குடிசைக்குத் தீவைத்து எரித்து கொல்லப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது தி.மு. வை சேர்ந்த அண்ணா ஆட்சியில் இருந்தார். இந்நிகழ்வு இந்தியா முழுவதிலும் மட்டுமின்றி, உலகளவிலும் சீன ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்குக்கு அறமன்ற நடுவராக இருந்த நடுவர் செ. மு. குப்பண்ணன் நிலக்கிழார்கள் குற்றம் இழைத்தார்கள் என தீர்ப்பு வழங்கினார்இதற்குப் பின்னர் நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு பொதுவுடைமை கட்சிகள் தலைமை தாங்கின. மிகையாக பங்குகொண்ட கலப்பாளை சேர்ந்த குப்பு என்பவரை நஞ்சு கொண்டு சிறையில் கொன்ற நிகழ்வும், எரிப்பு நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும்சித்தமல்லி முருகையன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும்) வெட்டி கொல்லப்பட்ட நிகழ்வும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.தஞ்சை மண்ணில்பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அரை லிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள். ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது.1968 டிசம்பர் 25கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். தெருவொன்றின் மூலையில் ராமையன் என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீவைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.   106 பேர் கைதானார்கள். ‘இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்" என்று காவல்துறை வாதாடியது. ‘அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.வெங்கொடுமைக்குபலியானவெண்மணித்தியாகிகள்

சுந்தரம்(45) ,சரோஜா(12) ,மாதாம்பாள்(25),தங்கையன்(5),பாப்பா(35),சந்திரா(12),ஆசைத்தம்பி(10)
வாசுகி(3),சின்னப்பிள்ளை(28),கருணாநிதி(12),வாசுகி(5),குஞ்சம்பாள்(35),பூமயில்(16),கருப்பாயி(35)
ராஞ்சியம்மாள்(16),தாமோதரன்(1),ஜெயம்(10),கனகம்மாள்(25),ராஜேந்திரன்(7),சுப்பன்(70),குப்பம்மாள்(35)
பாக்கியம்(35),ஜோதி(10),ரத்தினம்(35),குருசாமி(15),நடராசன்(5),வீரம்மாள்(25),பட்டு(46),சண்முகம்(13)
முருகன்(40),ஆச்சியம்மாள்(30),நடராஜன்(10),ஜெயம்(6),செல்வி(3),கருப்பாயி(50),சேது(26),நடராசன்(6)
அஞ்சலை(45),ஆண்டாள்(20),சீனிவாசன்(40),காவிரி(50),வேதவள்ளி(10),குணசேகரன்(1), ராணி (4).
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், செங்கொடி இயக்கமும் முன்பைவிட முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வெண் மணித் தீயில் வெந்த அந்த 44 கண்மணிகள் தீண்டாமை ஒழிப்புக்கான/ நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் தியாகிகள் ஆனார்கள். இன்றும் தமிழகத்தில் ஏன் நாடு முழுவதும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், தீண்டாமைக் கொடுமையும் பல வடிவங்களில் நீடித்து வருகின்றன.தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து போராடியதால்தான் கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் ஓரளவு உரிமைகளை பெற முடிந்தது. வர்க்க ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டதால்தான் அது சாத்தியமானது. ஆனால் இன்றைக்கு தலித் மக்களுக்கு எதிராக சில சாதி சங்கத்தலைவர்கள் அணிதிரளும் அவலக் காட்சியை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதற்கு பதிலாக, எளியமக்களை சாதியின் பெயரால் மோத விடும் சதி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.கிராமப்புறங்களில் விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. விவசாயம் நலிந்து ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பிழைப்புக்காக நகரங் களை நோக்கி குடிபெயர்ந்து செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்து மக்கள் தொகையில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களில் பாதிப்பேர் தலித் மக்கள். மீதி பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதி வித்தியாசம் இல்லாமல் விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் விவசாயத்தைப் பாதுகாக்க, விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தீண்டாமை ஒழிப்புக்காக, நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக போராட வெண்மணி தினத்தில் சூளுரைப்போம்.

No comments: