Thursday 19 December 2013

'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'கொற்கை' நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் சுயசரிதைகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழில் இந்தாண்டு 'கொற்கை' என்ற நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸ் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆழிசூழ் உலகு' என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் கொற்கை. காலம்'. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. ஆங்கிலேய இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் கூறியுள்ளார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும்மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல். தமிழில் புதினத்திற்கான விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
2014 மார்ச் மாதம் 11ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்

No comments: