Saturday 28 December 2013

கண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .

COM. T S RAJAN IS NO MORE
வருந்துகிறோம்...
 
    தோழர்.TSR, என அனைவராலும் அன்பாக  அழைக்கப்பட்ட அருமை தோழர். T.S.சுந்தரராஜன்,28.12.2013 காலை 7.15 மணிக்கு மறைந்து விட்டார் என்பதை   மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தோழர்.TSR. மும்பையில்,தனது மகன் வீட்டில்    தவறிக் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு,கடந்த 21.12.2013அன்று  மும்பை மருத்துவமனயில் சிகிச்சைக்காக  அனுமதிக் கப்பட்டிருந்தார்.
  தோழர்.TSR,எப்போதும் ஒரு போராளி யாகவே திகழ்ந்தவர் ஆவார். அனைவ ரோடும் அவர்  அன்பாக பழகக் கூடியவர்,தான் கொண்ட கொள்கையில் மிக உறுதியாக இறுதி வரை வாழ்ந்தவர்.தபால்-தந்தி தொழிற்சங்க இயக்கத்தில்   முன்னோடியாக,T3 & T4 சங்கங்களில் மத்திய,மாநில நிர்வாகியாக இருந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்துவைத்து,வழிகாட்டியாக இருந்த  தலைவர்.
      1968 போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டபோது புன்சிரிப்புடன் அதனை ஏற்றவர். பின்னர் சங்க முயற்சியால் திரும்பவும் பணியில் சேர்ந்து இறுதி மூச்சு வரை தொழிலாளிக்காகவும், இடதுசாரி கருத்துகளுக்காகவும் வாழ்ந்தவர்.  அவரது மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி நமது  மாவட்ட  சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு நமது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர்.TSR,மறைவிற்கு நமது BSNLEU சங்க கொடிதாழ்த்தி கிளை சங்கங்கள்  அஞ்சலி  செலுத்த வேண்டுமாய் நமது மாநில,மாவட்ட சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது .

No comments: