Saturday 30 November 2013

நடக்க இருப்பவை . . .

BSNLEU - முப்பெரும் விழா 
சங்க கொடியேற்றம் - சங்க பலகை திறப்பு-மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு 

02.12.2013 - திங்கள்
 மாலை 4 மணிக்கு பழங்காநத்தம் - தொலைபேசியகம்...
மாலை 4.30 மணிக்கு T V S நகர் C S C
மாலை 5 மணிக்கு அழகப்பன் நகர் தொலை பேசியகம் 

அருமை தோழர்களே!
நமது BSNLEU பழங்காநத்தம் கிளையின் சார்பாக நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்
அன்புடன் அழைப்பது...

P. ஜெகநாதன்                     M.முருகன்                V.K.ராஜ மார்த்தாண்டன் 
     கிளை தலைவர்            கிளை பொருளர்                   கிளை செயலர் 

Friday 29 November 2013

29.11.2013 பணி ஓய்வு பாராட்டு விழா . . .

அருமைத் தோழர்களே!
2013 - நவம்பர் இம் மாதம் நமது மதுரை SSA -யில் 8 தோழர்கள் பணி நிறைவு செய்கிறார்கள்.இவர்களுக்கான ஒருங்கிணைந்த பணி ஓய்வு பாராட்டு விழா நமது மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மணமகிழ் மன்றத்தில் 29.11.2013 வெள்ளி அன்று  நடைபெற உள்ளது. இச் சமயத்தில் ....
1.  O. முத்து ,                             SDE                       -G.M.Office,Madurai
2.  M. சின்னசாமி ,                   STS                       -Chinnamanur
3.  G.K. வெங்கடேசன்,          TM                        -Madurai,North
4.  A. நாராயணன் குட்டி,      TM                        -Palani
5.  V. வரதன்,                             TTA                       -Theni
6.  S.  துரைராஜ்,                       TM                         -Kodaikanal
7.  N.  ஆனந்தராஜன்,            STM                       -Madurai,K.K.Nagar
8.  V.  ராமையா,                      TM                     -Madurai,Ellis       .......... ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற உள்ளது.இவர்கள் ஓய்வு காலம் சிறக்க மதுரை BSNLEU மாவட்ட சங்கம் மனதார வாழத்துகிறது.
---என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன்,மாவட்டசெயலர்.  

Thursday 28 November 2013

சர்வதேச மாநாடு அ.சவுந்தரராசன் பங்கேற்கிறார்...

.சவுந்தரராசன்CITU ஆஸ்திரேலியா பயணம் . . .
உலகமயம், தாராளமயம், தனியார் மயம் அமலான வளர்முக நாடுகளிலும் தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஏகாதிபத்திய நாடுகளின் உற்பத்தி பொருட் கள் வளரும் நாடுகளின் சந்தைகளில் குவியவும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனத்தை இந்த நாடுகளில் செலுத்தவுமான நிகழ்வு போக்கு தீவிரப்பட்டது.புதிய பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை மறுக்கப்பட்டது. தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்தவர்கள் கடும் அடக்குமுறைக்கும், பழிவாங்கலுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.இந்த நாடுகளின் அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் கூச்ச நாச்சமில்லாமல் துணை நின்றன.இந்த உலகமய தீமைகளை எதிர்த்தும், தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டவும் உலகின் தெற்கு பகுதியில் உள்ள ஆசியா-பசிபிக் நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி பன்னாட்டு போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டன.இந்த அமைப்பின் பெயர் சிக்டூர் என்பதாகும்.இந்த அமைப்பில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.இந்த அமைப்பின் சர்வதேச மாநாடு டிசம்பர் 2 முதல் 6 வரை ஆஸ்திரேலியாவில் உள்ள பர்த் நகரில் நடைபெறுகிறது.இம்மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து செல்கிற 12 பேர் கொண்ட குழுவில் சிஐடியு தமிழ்மாநிலக்குழு தலைவர் .சவுந்தரராசன் பங்கேற்கிறார். அவர் சென்னையிலிருந்து 29ம் தேதி இரவு 12 மணிக்கு கோலாலம்பூர் வழியாக பர்த் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.பயணம் எல்லாவகைலும் வெற்றி பெற நமது BSNLEU மனதார வாழ்த்துகிறது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி...

மறைந்த தோழர் என்.பழனிவேலுக்கு மலர் வளையம் வைத்து தோழர்கள் கே.தங்கவேல் எம்எல்ஏ, .லாசர் எம்எல்ஏ, அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான என்.பழனிவேல் 27.11.2013 புதனன்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.அவரது இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரானஆயக்குடியில் வியாழனன்று நடைபெற்றது.மறைந்த தோழர் என். பழனிவேல். தற்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார். பழனித் தொகுதியிலிருந்து மூன்று முறைசட்டப்பேரவைக்கு தேர்வுசெய்யப்பட்டு மக்கள் பணியாற்றியவர். பல்வேறு விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமையேற்றவர்.மக்கள் பிரச்சனைகளில் உடனுக்குடன் தலையிட்டு தீர்வு காணும் தலைவரான இவர்அந்தப் பகுதி மக்களிடம் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தார். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.. உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் சிகிச்சைக்கு வந்த அவர் புதனன்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.தோழர் பழனிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தங்கவேல் எம்எல்ஏ, .லாசர் எம்எல்ஏ, கே. பாலபாரதி எம்எல்ஏ, CPI(M) கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் என்.பாண்டி, பா.விக்ரமன், டி.வெங்கடேசன் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன், செம்மலர் ஆசிரியர் எஸ்..பெருமாள், தீக்கதிர் ஆசிரியர் வி.பரமேசுவரன், பூவேந்தன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர்கள் பி.கே.கருப்புசாமி, வி.குமாரவேல், .கல்யாண சுந்தரம், பி.செல்வராஜ், ராஜமாணிக்கம், அருள் செல்வன், கே.ஆர்.கணேசன், சி.குணசேகரன், ஆர்.சச்சிதானந்தம், குருசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தீக்கதிர் பொது மேலாளர் வி.ஜெயராஜ், மேலாளர்கள் ஆர்.உமாபதி, எஸ்.பி.சிக்கந்தர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.இறுதி நிகழ்ச்சியில் விவசாயிகள், வியாபாரிகள், விவசாயத் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.மாலையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கே.தங்கவேல், .லாசர், கே.பாலபாரதி, என்.பாண்டி, பழனி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், பி.கே.கருப்பசாமி, எஸ்..பெருமாள், பூவேந்தன் (திமுக), ஆனந்தகிருஷ்ணன் (பெரியார் தி..), வெற்றிச்செல்வன் (மதிமுக), .எம்.மணி (சிபிஐ), திருஞானம் (காங்கிரஸ்), பி.கே.சுந்தரம் (அதிமுக) மற்றும் முத்துசாமி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். மறைந்த மக்கள் தொண்டர் தோழர்.என்.பழனிவேல் அவர்களுக்கு நமது BSNLEU சங்கம் சார்பாக அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

பழனியில் பாராட்டு விழா . . .
























அருமைத் தோழர்களே! அணைவருக்கும் வணக்கம்....
நமது BSNLEU பழனி கிளையின் சார்பாக இம் மாதம் நவம்பர் 2013-ல் பணி நிறைவு செய்யும் தோழர்.A .நாராயணன்குட்டி,TM- க்கு பாராட்டு விழாவும்,       7-வது மாவட்ட மாநாட்டில் தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளில், திண்டுக்கல் ரெவன்யு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பாராட்டு விழாவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் தோழர்.அன்பழகன் தலைமை தாங்க,தோழர்கள்,எஸ்.சூரியன்,Cசெல்வின் சத்தியராஜ்,P .கணேசன்,A .வைத்தியலிங்க பூபதி,பரிமள ரெங்கராஜ்,A .சிவபிரகாசம் ஆகிய மாவட்ட சங்க நிர்வாகிகள் உரை ஆற்றினார்கள்.பணி நிறைவு செய்யும் தோழர்.A.நாராயணன்குட்டி ஏற்புரை நிகழ்த்த  தோழர்.A .சாது சிலுவைமணி நன்றி கூறினார்.இனிதே விழா நிறைவுற்றது.
பழனி பாராட்டு விழாவில் மாவட்ட தலைவர் தோழர்.C.செல்வின் சத்தியராஜ் உரை