மறைந்த
தோழர் என்.பழனிவேலுக்கு மலர் வளையம் வைத்து தோழர்கள் கே.தங்கவேல் எம்எல்ஏ, ஏ.லாசர் எம்எல்ஏ, அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள்
சட்டமன்ற
உறுப்பினரான
என்.பழனிவேல் 27.11.2013 புதனன்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.அவரது இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரானஆயக்குடியில்
வியாழனன்று
நடைபெற்றது.மறைந்த தோழர் என். பழனிவேல். தற்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார். பழனித் தொகுதியிலிருந்து
மூன்று
முறைசட்டப்பேரவைக்கு
தேர்வுசெய்யப்பட்டு
மக்கள்
பணியாற்றியவர்.
பல்வேறு
விவசாயிகள்
போராட்டத்திற்கு
தலைமையேற்றவர்.மக்கள் பிரச்சனைகளில்
உடனுக்குடன்
தலையிட்டு
தீர்வு
காணும்
தலைவரான
இவர்அந்தப்
பகுதி
மக்களிடம்
செல்வாக்கு
மிக்கவராகத்
திகழ்ந்தார்.
பல்வேறு
போராட்டங்களில்
பங்கேற்று
சிறை
சென்றவர்..
உடல்
நலக்குறைவு
காரணமாக
மதுரையில்
சிகிச்சைக்கு
வந்த
அவர்
புதனன்று
இரவு
மாரடைப்பு
காரணமாக
காலமானார்.தோழர் பழனிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள்
கே.தங்கவேல் எம்எல்ஏ, ஏ.லாசர் எம்எல்ஏ, கே. பாலபாரதி எம்எல்ஏ, CPI(M) கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் என்.பாண்டி, பா.விக்ரமன், டி.வெங்கடேசன் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள், தீக்கதிர் ஆசிரியர் வி.பரமேசுவரன், பூவேந்தன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர்கள் பி.கே.கருப்புசாமி, வி.குமாரவேல், வ.கல்யாண சுந்தரம், பி.செல்வராஜ், ராஜமாணிக்கம், அருள் செல்வன், கே.ஆர்.கணேசன், சி.குணசேகரன், ஆர்.சச்சிதானந்தம்,
குருசாமி
ஆகியோர்
அஞ்சலி
செலுத்தினர்.
தீக்கதிர்
பொது
மேலாளர்
வி.ஜெயராஜ், மேலாளர்கள் ஆர்.உமாபதி, எஸ்.பி.சிக்கந்தர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.இறுதி நிகழ்ச்சியில்
விவசாயிகள்,
வியாபாரிகள்,
விவசாயத்
தொழிலாளர்கள்
என
ஆயிரக்கணக்கானோர்
பங்கேற்று
கண்ணீர்
மல்க
அஞ்சலி
செலுத்தினர்.மாலையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கே.தங்கவேல், ஏ.லாசர், கே.பாலபாரதி, என்.பாண்டி, பழனி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், பி.கே.கருப்பசாமி, எஸ்.ஏ.பெருமாள், பூவேந்தன் (திமுக), ஆனந்தகிருஷ்ணன்
(பெரியார்
தி.க.), வெற்றிச்செல்வன்
(மதிமுக),
ஏ.எம்.மணி (சிபிஐ), திருஞானம் (காங்கிரஸ்), பி.கே.சுந்தரம் (அதிமுக) மற்றும் முத்துசாமி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். மறைந்த மக்கள் தொண்டர் தோழர்.என்.பழனிவேல் அவர்களுக்கு நமது BSNLEU சங்கம் சார்பாக அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
No comments:
Post a Comment