ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற மதுரை மாணவி : ஒலிம்பிக்கிலும் சாதிக்க லட்சியம்
மேலூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில், 100 மற்றும் 200 மீ., தூர ஓட்டத்தில், புதிய சாதனையுடன் தங்க பதக்கம் வென்றார், 20 வயதான மதுரை மாணவி அர்ச்சனா.
மேலூர் திருவாதவூர் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுசீந்திரன்.
இவரது மகள் அர்ச்சனா, சென்னை அண்ணா பல்கலையில் பி.இ., சிவில் இரண்டாம் ஆண்டு
படிக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே 100, 200 மீ., ஓட்டம், 400 மீ., ரிலே போட்டியில் தொடர்ந்து சாதனை புரிந்தார். மாநில அளவிலான போட்டியில் 50 தங்கம், 10 வெள்ளி பதக்கங்கள் பெற்றார். தேசிய அளவில் 25 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றார். சமீபத்தில் நடந்த முதல்வர் கோப்பைக்கான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். மதுரையில் நடந்த தென் மண்டல அளவிலான போட்டியில் 100, 200 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். கொச்சியில் நடந்த தேசிய போட்டியில் முதலிடம் பெற, தெற்காசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த வாரம் நடந்த போட்டியில் 100 மீ., ஓட்டத்தை 12.01 வினாடியிலும், 200 மீ.,க்கு 24.063 வினாடியிலும் ஓடி, புதிய சாதனை படைத்தார்.இதன்மூலம், 2007ம் ஆண்டு தெற்காசிய போட்டியின் சாதனை முறியடிக்கப்பட்டது. இவ்விரு போட்டியில் தங்கம் வென்ற இவர், 400 மீ., தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். "2016 ஒலிம்பிக்
போட்டியில் இந்தியா சார்பில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்' என்கிறார் அர்ச்சனா.

No comments:
Post a Comment