Saturday 16 November 2013

நரேந்திர மோடியின் வரலாற்று உளறல்கள் . . .

நரேந்திர மோடியின் வரலாற்று உளறல்கள்பா... பிரதமர் வேட்பாளராக நாடு முழுவதும் வலம் வரும் நரேந்திர மோடி - அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு.
திருச்சியில் மோடி:- தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் ..சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.
வரலாறு:- வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது ..சி. அல்ல; இராஜகோபாலாச்சாரி.
பாட்னா கூட்டத்தில் மோடி:- குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது.
வரலாறு:- சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர்.
பாட்னா கூட்டத்தில் மோடி:- மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றி கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரிகளால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை.
வரலாறு:- அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது பாகிஸ்தானில் இருக்கிறது.
மோடி:- வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சி வீதம் 8.4 சதவீதமாக இருந்தது. இப்போது ஐக்கிய முன்னணி ஆட்சியில் 4.8 சதவீதம்தான்.
உண்மை:- வாஜ்பாய் ஆட்சியில் முதல் 6 ஆண்டில் சராசரி வளர்ச்சி 7 சதவீதம். கடைசி 5 ஆண்டு சராசரி வளர்ச்சி 5.9 சதவீதம் என்று மறுத்துள்ளார் .சிதம்பரம்.
டெல்லி பல்கலைகழகத்தில் மோடி:- குஜராத் பெற்றுள்ள வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி.
உண்மை:- மனித மேம்பாட்டு குறியீடுகளின்படி குஜராத் சுகாதாரத்தில் 16 ஆவது மாநிலமாகவும், கல்வியில் 14 ஆவது மாநிலமாகவும் கட்டமைப்பு வசதிகளில் 11 ஆவது மாநிலமாகவும் இருக்கிறது.
மோடி:- பட்டேல் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்து கொள்ளவில்லை.
உண்மை:நேரு கலந்து கொண்டார். "டைம்ஸ் ஆப் இந்தியா" உள்ளிட்ட நாளேடுகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையிலும் குறிப்பிட்டுள்ளார்

கான்பூரில் மோடி:- திட்டக் குழுவுக்கு தலைமை தாங்கும் பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர். நாளொன்றுக்கு கிராமத்தில் குடும்ப வருமானம் ரூ.26-க்கு அதிகமாகவோ அல்லது நகரத்தில் ரூ.32க்கு அதிகமாகவோ இருக்குமானால், அவர்கள் வறுமைக் கோட்டை கடந்து விட்டதாகக் கூறுகிறார். இது ஏற்கக் கூடியது தானா?
உண்மை:- திட்டக்குழு இந்த வரையறையை ஒரு குடும்பத்துக்குச் சொல்லவில்லை. தனி மனிதருக்குச் சொல்கிறது. அத்துடன் மோடி குறிப்பிடுவதுபோல் வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படவில்லை. செலவின் அடிப்படையில் தான் திட்டக் குழு நிர்ணயித்துள்ளது.

No comments: