Saturday 16 November 2013

உணவுப்பாதுகாப்பு சட்டமாம்! இது வந்துவிட்டால் . . .


ஏழைகளுக்குச் செல்லவேண்டிய உணவு தானியங்கள் தனியார் முதலைகளுக்கு சென்ற அவலம்!
டெல்லி: உணவுப்பாதுகாப்பு சட்டமாம்! இது வந்துவிட்டால் இந்தியாவில் ஏழைகளே இருக்கமாட்டார்களாம் இதுதான் 'ஊழல்' காங்கிரஸ் தலைமை .மூ.கூ.வின் பெருமிதம். ஆனால் டெல்லியில் மக்களுக்கு ரேஷன் மூலம் போய்ச்சேரவேண்டிய கோதுமை மூட்டை மூட்டையாக தனியார் மில்களுக்குச் சென்றதை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் ரகசிய விசாரணை அம்பலப்படுத்தியது.இந்தியத் தலைநகர் டெல்லியில் இது நடக்கிறது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே பயங்கரமாக இருக்கிறது.
டெல்லியில்..உள்ள ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கிடங்கிலிருந்து 4 டிரக்குகள் ரேஷன் கடைகளுக்குக் கொண்டு செல்லவேண்டிய கோதுமை மூட்டைகளை தனியார் மாவு மில்களுக்கு எடுத்து சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.டெல்லியின் லாரன்ஸ் சாலையில் மிகப்பெரிய மில்கள் உள்ளன. அங்குதான் இந்த 4 டிரக்குகளும் சென்றுள்ளது.பொது வினியோக கோதுமை இல்லாமல் இந்த 4 மில்களும் நடக்கவே நடக்காதாம்! போலீஸ், நடவடிக்கை, சட்டவிரோதம், ஏழைகள் வயிற்றில் அடிக்கிறொம் என்ற எதற்கும் அஞ்சாமல் இந்தக் கொள்ளையை நடத்துகிறது டெல்லி தனியார் மில்கள் இதற்கு அரசு எந்திரங்களும் உடந்தை.இந்த விவகாரமகேசவ்புர காவல் சரகப் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பது போல் எடுத்து பிறகு தவறுகள் நடக்கவில்லை என்று கைவிரித்துள்ளது.இந்த கொடுமையான செயலை செய்வதில் டாப் டு பாட்டம் அதிகாரிகள் உடந்தை வேறு. மூட்டை ஒன்றுக்கு ரூ.200 எல்லா தலைகளுக்கும் செல்கிறதாம்!!ஒரு நாட்டின் தலைநகரில் இவ்வளவு அரசு எந்திரங்களின் உடந்தையுடன் பெரும் உணவுப்பொருள் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்தால் எல்லாம் சரியாகிவிடுமாம்

No comments: