பேச்சுதாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத் துவத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் “தமிழக பண்பாட்டுச் சூழல்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது வலியுறுத்தினார். பாரதியின் தேச விடுதலை பாரம் பரியத்தையும், பாரதி தாசனின் சமூக விடுதலை பாரம்பரியத்தையும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் உழைப்பாளி மக்களின் போராட்ட பாரம்பரியத்தையும் தமுஎகச முன்னெடுத்துச் செல்கிறது.யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அந்தக்காலத்திலேயே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ்மொழியில் இருந்தன.
அதனை
பெற்றாவது
இங்கே
கற்பிக்க
வேண்டும்
என்று
அப்போதே
மார்க்சிஸ்ட்
கட்சி
சார்பில்
சட்டமன்றத்தில்
வலியுறுத்தினேன்.
அனைத்து
நிலைகளிலும்
தமிழ்
மொழியே
பயிற்று
மொழி
யாக
கொண்டு
வர
வேண்டும்.
அரசு
நினைத்தால்
அதனை
செய்யலாம்.ஆய்வுகளை தாய்மொழியில்தான்
எளிதாக
புரிந்து
கொள்ள
முடியும்.
தாய்மொழியில்
படித்தால்தான்
அறிவு
பெருகும்.மதவெறிப் பிடித்த பாசிச ஆர்எஸ்எஸ், அவர்களுடைய அரசியல் கட்சிகள் 2014 தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி இந்து அரசு அமைக்கவும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவும் முயற்சிக்கிறார்கள்.
காங்கிரஸ்
கட்சி
மக்கள்
விரோதப்
பொருளாதாரக்
கொள்கையை
கடைப்
பிடிக்கிறது.
ஏகபோக
முதலாளிகளும்,
ஆளும்
வர்க்கமும்
இந்திய
வளங்களை
சூறையாடுகின்றன.
இந்த
இரண்டு
பேராபாயத்தை
தடுக்க
இதற்கெதிரான
முற்போக்கு,
இடதுசாரி,
ஜனநாயக
சக்திகள்
அணியாக
ஒன்று
திரள
வேண்டும்.பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு
இஸ்லாமிய
மக்கள்
இரையாகக்
கூடாது.பெரும்பான்மை மதவெறிக்கு சிறுபான்மை மதவெறி தீர்வல்ல. காந்தியின் வழியில் வளர்ந்தவர் வல்லபாய் பட்டேல். காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழியில் வளர்ந்தவர் மோடி. சிலை வைப்பதன் மூலம் தங்களது மதவெறி நடவடிக்கைகளுக்கு
வல்லபாய்
பட்டேலை
பயன்படுத்த
முயற்சிக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் அணியாக ஒன்று திரள வேண்டும்.
No comments:
Post a Comment