பாவலர் ஓம் முத்து மாரி மறைவுக்கு இரங்கல். . .
.தமுஎகசவின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாவலர் ஓம் முத்துமாரி திருவேங்கடத்தில் வியாழனன்று காலமானார். அவரது இறுதிநிகழ்ச்சி வெள்ளியன்று நடை பெற்றது எம்.என்.எஸ் வெங்கட்டராமன், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள், எடிட்டர் லெனின், தமுஎகச தலைவர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.வேலாயுதம், உதயசங்கர், கடலூர் ஜீவானந்தம், நாறும்பூநாதன், லட்சுமிகாந்தன், பாடகர் திருவுடையான், சாத்தூர் லட்சு மணப்பெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப்பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், நெல்லை கே.ஜி.பாஸ்கரன், விருதுநகர் அர்ச்சுணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன், எம். எஸ்.நல்லுசாமி, சங்கரன்கோவில் முத்துப்பாண்டியன், கோவில்பட்டி ராமசுப்பு, சாத்தூர் சுப்பராவ், நெல்லை எஸ்.ஆறு முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கருப்ப சாமி மற்றும் லட்சுமி நாராயணன், மகேஷ், எம்.பி.எஸ்.மணி, ரத்தினவேலு, சென்னைக் கலைக்குழு அசோக், டாக்டர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
பாவலர் ஓம் முத்துமாரி இல்லத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கலைஞர்கள் அவரது பாடல்களை பாடி உருக்கமாக அஞ்சலி செலுத்தினர். நாட்டுப்புறக் கலைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பாவலர் ஓம் முத்துமாரிக்கு அஞ்சலி செலுத்தினர்.தோழர்.சங்கரய்யா இரங்கல் : பாவலர் ஓம் முத்து மாரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் செய்தி அனுப்பியிருந் தார்.
தமிழகம்முழுவதும்உள்ள கிராம புரங்கள் அனைத்தும் தனது நாட்டுப்புறக் கலையை கொண்டு சென்ற மூத்த கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவார்களின் மறைவுக்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.
தமிழகம்முழுவதும்உள்ள கிராம புரங்கள் அனைத்தும் தனது நாட்டுப்புறக் கலையை கொண்டு சென்ற மூத்த கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவார்களின் மறைவுக்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.
No comments:
Post a Comment