உரிமைக்கான போராட்டம் . . .
"உரிமையை காக்க,மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம்,போக்கு வரத்து தொழிலாளர் களுக்கு ஏற்ப்பட் டுள்ளது ,"என்று CITU மாநில தலைவர்,தோழர்.எ.சௌந்தரராஜன்,MLA பேசினார்.மதுரையில் நடை பெற்ற அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டத்தில்,அவர் பேசியதாவது.கடந்த 2001 AIADMK ஆட்சி நடந்த போது நடை பெற்ற உரிமை போராட்டத்தில்,22 ஆயீரம் தொழிலாளர்கள் சிறை சென்றனர்.மீண்டும் நம் உரிமைக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின்,அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன.வெளி மாநிலங்களிலிருந்து, பிழைப்பிற்காக 20 லட்சம் தொழிலாளர்கள்,தமிழகத்தில் குடிபெயர்ந்து உள்ளனர் அப்படி ஒரு நிலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடாது.தொழிற்சங்கங்கள் புதிய பரிணாமத்தை பெற்றுவருகிற காலத்தில் நமது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தாவிட்டால்,மாதந்தோறும் 3000 ரூபாய்,இடைக்காலமாக நிதியை அரசாங்கம் வழங்கவேண்டும் என் வலியுறித்தினார்.CITU சங்கநிர்வாகிகள் தோழர்கள்.சுப்ரமணியன்,நாகராஜன்,அழகர்,ராஜேந்திரன்,ஆறுமுகநைனார்,பிச்சை,தெய்வராஜ்,பா.விக்ரமன் ஆகியோர் பேசினார்கள்
No comments:
Post a Comment