Tuesday 30 June 2015

இரயில்வே மீது கொடுவாளை ஏவும் தேப்ராய் அறிக்கை-BSNLEUமதியசங்க அறைகூவலின்படி மதுரையில் ஆர்ப்பாட்டம்.

பிபேக் தேப்ராய் கமிட்டி இந்திய ரயில்வேயை பல பிரிவுகளாக பிரித்து தனியார்மயப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனை தனியார்மயம் என அழைப்பதற்கு பதிலாகஅரசின் பிடியிலிருந்து விடுதலைமயம்என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விமர்சிப்பவர்களை தேவையில்லாமல் கிலியை ஏற்படுத்தும் இடதுசாரிகள் எனவும் காலாவாதியான நேரு காலத்திய சோசலிச கருத்துகளை உடையவர்கள் எனவும் பா... அரசாங்கமும் அதன் கார்ப்பரேட் துதிபாடிகளும் விமர்சிக்கக்கூடும். உண்மையில் அறிக்கையை உருவாக்கியவர்களுக்கும் அதன்ஆதரவாளர்களுக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.ஏனெனில் இந்த அறிக்கைமுன்வைக்கின்ற தீர்வுகளும் அதற்கான காரணிகளும் நவீன தாராளமய சூத்திரங்களுக்கு முற்றிலும் இசைந்தவையாக உள்ளன. ரயில்வேயின் குறைகள் அனைத்திற்கும் காரணம் அது அரசுத்துறையாக இருப்பதுதான் எனவும் இக்குறைகளுக்கு சர்வரோக நிவாரணி தனியார்மயம்தான் எனவும் அறிக்கை கூறுகிறது.பிரிட்டன் ரயில்வேயை தனியார்மயப்படுத் தியதால் ஏற்பட்ட படுபாதகமான விளைவுகளை யும் அல்லது ஐரோப்பாவில் ரயில்வேயை அரசுத்துறையே இயக்குவதின் வளமான அனுபவத்தையும் இக்கமிட்டி உதாசீனப்படுத்தியுள்ளது.
அனைத்துப் பணிகளும் தனியாருக்கு!
ரயில்வேயை பல பிரிவுகளாக உடைத்து பிரிக்க வேண்டும் என இந்த அறிக்கை கோருகிறது. இருப்புப் பாதைகளை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, இருப்புப் பாதை தளவாடங்களை உற்பத்தி செய்வது, ரயில் வண்டிகளை இயக்குவது என பல பிரிவுகளாக பிரித்துஅவற்றை தனியாருக்கு தரவேண்டும் என தேப்ராய் கமிட்டி வலியுறுத்துகிறது. இதற்காக அடுத்தஐந்தாண்டுகளில் பல களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமிட்டி கூறுகிறது.முதலில் ரயில்வேயின் கணக்குகளை பராமரிப்பதில் வணிகமுறை அடிப்படையிலான நடைமுறை கொண்டு வரவேண்டும் என தேப்ராய் கமிட்டி ஆழமாக குறிப்பிடுகிறது. ரயில்வேயின் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு வழித்தடமும் அதில் ஈடுபடுத்தும் சமூக முதலீடும்லாபம் தரக்கூடியதுதானா என்பதை வெளிப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. சமூகப்பணிகளுக்காக ஆகும் செலவை ரயில்வே ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக மத்திய அரசாங்கம் பட்ஜெட் மூலம் மானியமாக தந்துவிட வேண்டும். இரண்டாவதாக ஒருசுயேச்சையானகட்டுப்பாட்டுக் குழு உருவாக்கப் படும். கட்டணத்தை நிர்ணயிப்பது, தனியாரி டையே நியாயமான போட்டியை உருவாக்கு வது, ரயில்வேயின் பல்வேறு வசதிகளை பயன்படுத்திட தனியாருக்கு கட்டணத்தை தீர்மானிப்பது ஆகிய பணிகளை இந்த குழுதான் நடைமுறைப்படுத்தும்.அதே சமயத்தில் ரயில்வே பாதுகாப்பு, ஊழியர்களுக்கான வீட்டு வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஊழியர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான மானியத்தை அரசு தருவது தேவை எனவும்இக்கமிட்டி முன்வைக்கிறது. இவையெல்லாம் நவீன தாராளமயக் கொள்கைகளை அப்படியேபின்பற்றுவது என்பதாகும். அடிப்படை வசதிகளை உருவாக்கிட செலவு அரசாங்கத்திற்கு; அதில் அதீத லாபம் தனியாருக்கு எனும் அணுகுமுறை இதில் உள்ளது.
பிரிட்டன் தனியார்மயத்தின் அனுபவம்
இது ஏதோ பைத்தியக்காரத்தனமான கற்பனை என எண்ணுவோர் பிரிட்டன் ரயில்வேதனியார்மயத்தின் அனுபவத்தை நோக்கவேண்டும். பிரிட்டனின் தனியார்மயத்தைதான் தேப்ராய் கமிட்டி முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளது. இதன் அனுபவம் குறித்து பல ஆய்வுகள் உள்ளன. பிரிட்டன் அரசின் ஆய்வு கூட உள்ளது.பிரிட்டனில் ரயில்வே அடிப்படை வசதிகளை உருவாக்கிட 1993ல் அமைக்கப்பட்ட ரயில் டிராக் பி.எல்.சி. எனும் சுயேச்சையான அமைப்பு 2001ல் திவாலாகியது.
ஏன்? ரயில்வேயில் செயல்பட்ட தனியார் அமைப்புகள் தாம் தரவேண்டிய நியாயமான கட்டணங்களை தரவில்லை. பிறகு நெட் ஒர்க் ரயில் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. 2002-03ல் 9,600 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்காக இருந்த கடன் 2012ல் 30,000 மில்லியனாக உயர்ந்தது. இருப்புப்பாதைகளை பராமரிக்க ஆகும் செலவைவிட இக்கடனின் வட்டி அதிகமாக உள்ளது. ஆனால்பிரிட்டன் ரயில் தனியார்மயத்தை முன்மாதிரி யாக கொண்டு பிபேக் தேப்ராய் கமிட்டி முன்வைக்கும் சிகிச்சை என்பது நோயைவிட மோசமாக உள்ளது.ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தையும் பிபேக் தேப்ராய் கமிட்டி ஆய்வு செய்திருக்கலாம். சில நாடுகளில் அரசே ரயில்வேயை இயக்குகிறது. சில நாடுகளில் மாநில குடியரசுகள் ரயில்வேயை இயக்குகின்றன. சில நாடுகளில் ரயில்வே பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பிரிவுகளும் அரசின் கீழ் இயக்கப்படுகின்றன. இப்படி பல நல்ல உதாரணங்கள் உள்ளன. ஆனால் தேப்ராய் கமிட்டி இவற்றைஆய்வு செய்யவில்லை. தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை மோடி அரசாங்கம் நிராகரிப்பதேசிறந்தது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் துதிபாடுவோரின் அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்யாது.ரயில்வேயை பொது நன்மைக்கான சேவை என்பதைவிட லாபம் தரவேண்டிய பொருளாதார அமைப்பாக பார்ப்பதும் மக்களைவிட லாபம்தான் முக்கியம் எனும் கோட்பாடும் தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை நிராகரிக்கும் அரசியல் வல்லமையை மோடி அரசாங்கத்திற்கு தராது.
மதுரை லெவல் 4 வளாகத்தில்  30.06.15 காலை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு தோழர்.சி செல்வின் சத்தியராஜ் தலைமைதாங்கினார். மத்திய அரசின் தனியார்மய  கொள்கையை கண்டித்து  தோழர்.என். சோனைமுத்து, தோழர்.எஸ். சூரியன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர்.எஸ்.மாயாண்டி நன்றிகூற ஆர்ப்பாட்டம்  நிறைவுற்றது.முன்னதாக மறைந்த தோழர்.பி .முருகேசனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.குறுகிய கால அழைப்பாகினும் அதிக எண்ணிக்கையில்  ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட CSC  தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள்.

26.06.15 டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்ட முடிவுகள்.

அருமைத் தோழர்களே ! 26.06.15 அன்று  டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்ட முடிவுகள் குறித்து FORUM  கண்வீனரும், நமது BSNLEU பொதுச் செயலருமான தோழர்.பி. அபிமன்யு வெளியிட்டுள்ள சர்குலர் ...அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை தீர்வு குறித்துவழிகாட்டல்.

ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை தீர்வு குறித்து  நமது மாநில சங்கங்கள் அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான இயக்கத்திற்குப் பின் தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டல் நெறிமுறைகள் மாவட்ட நிர்வாகங் களின் கவனத்திற்கு....1.ஒட்டுமொத்த ஒப்பந்த ஊழியர்கள் ...2 ஹவுஸ் கீப்பிங் 

Monday 29 June 2015

தோழர்P.முருகேசன் மறைந்தார்,வருந்துகிறோம் ... கண்ணீர் அஞ்சலி.

அருமைத் தோழர்களே ! தமிழக "லைன் ஸ்டாப்" இயக்கத்தில்,ஒப்பந்த ஊழியர் சங்க வளர்ச்சியில், நமது கே.ஜி. போஸ் அணியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் தோழர் பி. முருகேசன் , (வயது-70) 28.06.15 அன்று மதுரையில் ஒரு "டூ வீலர்" விபத்தில், சிகிச்சை பலனளிக்காது இரவு 03.00 மணிக்குமேல் மரணமடைந்து விட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரின்  மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலியை  உரித்தாக்குகின்றோம். கண்ணீர் அஞ்சலி செலுத்து கின்றோம். 
மதுரை விளாங்குடி, விவேகானந்தர் தெருவில் அவரது இல்லத்தில்  இருந்து 29.06.15 இன்று  மதியம் 3 மணிக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெறும். 

தபால் அட்டை அனுப்பும் இயக்கம்-FORUM முடிவு ...

BSNL புத்தாக்கதிற்கு 2 நாட்கள் வேலை நிறுத்தம்  செய்து 2 மாதங்கள் கடந்து விட்ட பிறகும்   ஓய்வூதியர்க்கு 78.2 IDA இணைப்பை தவிர எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 22 ஆம் தேதிவரை கீழ் கண்ட வாசகங்கள் அடங்கிய தபால் அட்டையை அனைத்து ஊழியர்களும் ,அதிகாரிகளும் மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சர்க்கு அனுப்ப  வேண்டும் என FORUM கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .

" Hon’ble Minister of Communications & IT is requested to immediately settle the demands submitted by the Forum, for the revival of BSNL. "
அஞ்சல் அனுப்பும் இயக்கத்தை அனைத்து கிளைகளும் சக்தியாக செய்திட வேண்டுமாய் BSNLEU மதுரை மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -48.

அருமைத் தோழர்களே ! 26.06.15 அன்று டெல்லியில் FORUM கூட்டம் நடை பெற்றது.அதன்முடிவுகள்குறித்தும்,மற்றும்சில செய்திகள் குறித்தும் நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Sunday 28 June 2015

BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது...


ஆணிவேரை . . . அசைத்து பார்க்கலாமா ?

மத்தியில் ஆளும் மதவெறி பிடித்த பாரதீய ஜனதா அரசு, சிறு, குறுந்தொழில்களை அழிப்பதில் காங்கிரசுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. இந்திய மக்களை ஒட்டச் சுரண்டி, ஓட்டாண்டிகளாக்கி பன்னாட்டு பாவிகளையும், இந்திய பெரும் முதலாளி கூட்டத்தையும் மேலும் கொழுக்க வைப்போம் என கங்கணம் கட்டி செயலாற்றி வருகிறது.தேர்தலில் மோசடி மன்னன் மோடி, வார்த்தை ஜாலங்களால் வக்கணையாக பேசி வாய்ப்பந்தல் போட்டு பன்னாட்டு பெருச்சாளிகளிடம் பணத்தை பெற்று தேர்தலில் தேறியது இந்திய நாடே அறிந்த ஒன்று.ஏற்கெனவே பலவகையான சிறு, குறுந்தொழில்களை காவு கொடுத்து முடிந்த நிலையில் எஞ்சியுள்ள 20 சிறு,குறுந்தொழில்களையும் பன்னாட்டு, இந்திய பெருமுதலாளிகள் தயாரித்து கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது.அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் பேரிடியை இறக்கிவிட்டிருக்கிறது. உற்பத்தியாளர்களும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிற நிலையை மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.ஏற்கெனவே மதுரையில் பாரம்பரியமான பஞ்சாலைகள் புதிய ஜவுளிக் கொள்கை என்ற பெயரில் காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்ததால் ஆலைகளின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. வி.ஆர்.எஸ். என்ற பெயரில் தொழிலாளர்கள் வீட்டுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். மதுரைவாழ் தொழிலாளர் குடும்பங்கள் வாழ வழியின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து விட்டனர்.மதுரையில் எஞ்சியிருப்பதோ அடி சரக்குப் பட்டறைகளும், அப்பளக் கம்பெனிகளும் தான். ஊறுகாய் உள்ளூரில் தயாரித்தால் உலக பணக்காரன் ஒப்புக் கொள்ளமாட்டான் என ஊதாரி அரசாங்கம் நினைக்கிறது. உள்ளூர்க்காரன் வெடி தயாரித்தால் வெடிக்காது எனச்சொல்லி வாழ்க்கைக்கே வேட்டு வைக்கிறது.
திண்டுக்கல் பூட்டையே திருடி விற்கப் பார்க்கிறது. இளம்பெண்களின் கைகளை வெளிநாட்டு வளையல்கள் தான் இனிஅலங்கரிக்கும். இந்திய சாமிகள் வெளிநாட்டு பத்திகளின் வாசனையில் வலம்வரப் போகின்றன.கட்டுமான தொழிலிலிருந்து, கள்ளமிட்டாய் தயாரிப்பு கம்பெனிகள் வரை வெளிநாட்டுக்காரன் மேற்பார்வையில் தான் நடைபெறும் போல. சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் முடங்கிப்போய், எதிர்காலத்தை நினைத்து ஏங்கித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களை வதைக்கும் மத்திய அரசுகளின் நிழல்களின் பின்னால் ஒளிந்து கொண்டு திமுக - அதிமுக கட்சிகள் நாட்டைகாக்கும் நல்லவர்கள் நாங்கள் தான் என்று நாடகம் ஆடி நயவஞ்சகம் செய்கின்றனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இதய சுத்தியோடு இந்திய மக்களின் வாழ்வை பாதுகாக்க, மெழுகுபோல் தன்னையே கரைத்து, கொள்கை மாறாமல், மாற்றுக் கொள்கையை முன்வைத்து சிறு, குறுந்தொழில் பாதுகாப்பு மாநாட்டை 29.6.2015 அன்று மதுரை நகர் ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் நடத்துகிறது.மாசற்ற மதுரை மக்களை மனந்திறந்து அழைக்கிறது. அனைவரும் வாரீர், வாரீர்..தொழில் காப்போம்! தொழிலாளரைக் காப்போம்இரா.விஜயராஜன் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் -  CPI(M)

ஒவ்வொருவருக்கும் PAY SLIP கைகளில் கிடைக்க ஏற்பாடு...

அருமைத் தோழர்களே ! ஒவ்வொருவருக்கும் PAY SLIP கைகளில் கிடைப்பதில் தற்போது சிரமம் உள்ளதால் அனைவருக்கும்  PAY SLIPகிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு  உரிய ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

Pay Slip  e mail மூலம் இனி அனைவரும் பெறலாம்,அதற்க்கென ஊழியர்கள் தங்கள் personal mail ID பயன் படுத்தலாம். மெயில் ID  ESS  PORTAL ல் பதிவு செய்துகொள்ளலாம்,OFFICIAL மெயில் ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை, மாத ஊதியம் GENERATE பணி முடிந்தஉடன் மாநில PAY ROLL குழு இந்த பணியை செயல்படுத்தும்
கம்ப்யூட்டர்   புலப்படாதோர்க்கு, அந்தந்த UNIT / SUPERVISOR கள்  ஊழியர்க்கான PAYSLIP-ஐ, PRINT  எடுத்து ஊழியர் கையில் சேர்ப்பர். இந்த திட்டம் இந்த ஜூன்-2015 மாத சம்பளத்திலிருந்து அமலாக்கம் செய்யப்படும்  என CORPORATE  அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Saturday 27 June 2015

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு...


நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -47.

அருமைத் தோழர்களே ! 1.1.2007-க்குப்பின் நமது BSNLலில் நியமனமான TTAகளுக்கு ஒரு கூடுதல் இன்கிரிமெண்ட் அனுமதிக்கப்பட்டுள்ளது, மற்றும் சில செய்திகள் குறித்து நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -47 வெளியிட்டுள்ளது .... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

Friday 26 June 2015

TTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரிமென்ட் . . .

BSNL Board approved one additional increment to TTAs, to compensate wage loss.
Com.P.Abhimanyu, GS and com.Swapan Chakraborty, Dy.GS, met shri A.N.Rai, Director (HR) yesterday the 24-06-2015, and enquired about the status of the HR issues of the  Non-Executives,  remaining pending for the approval of the BSNL Board. The Director (HR) replied that the one additional increment to the TTAs, appointed on or after 01.01.2007, has been approved by the BSNL Board, in its meeting held on 19.06.2015. Even though the demand of BSNLEU and the JAC is for 30% fitment to those who are appointed after 01.01.2007 and upto 07-05-2010, it must be borne in mind that even this one additional increment is approved by the Board, only because of the struggles that have been conducted. BSNLEU and JAC congratulates the beneficiaries. Further action on the wage loss issue will be decided after assessing the extent to which the wage loss is compensated by this one extra increment.
TTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரிமென்ட்
அருமைத் தோழர்களே! நமது சங்கத்தின் தொடர் முயற்சியின் பயனாக  01.01.2007 க்கு பிறகு பணியில் சேர்ந்த TTA  ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை ஈடுசெய்யும் விதமாக ஒரு கூடுதல் இன்க்ரிமென்ட் வழங்க     19.06.15 அன்று நடைபெற்ற BSNL நிர்வாககுழு கூட்டத்தில் (BOARD MEETING) ஒப்புதல் வழங்க பட்டுவிட்டதாக நமது மத்திய சங்கம் (CHQ)தகவல் வெளியிட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Thursday 25 June 2015

வறுமையை . . . ஒழிப்போம் . . . !


மோடிக்கு - மோடி . . .

மொத்தம் 16 வழக்குகளை சந்திக்கும் லலித்மோடி சந்தோஷமாக உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். லண் டனை மையமாகக் கொண்டு வசித்து வரும் லலித் மோடி மீது அந்நியச் செலா வணி மோசடி தொடர்பான வழக்குகள் காரணமாக ரூ.1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தி ருக்கிறது. இதில் ஒரு பைசா கூட அவர் அபராதம் கட்டவில்லை; விசாரணையை சந்திக்கவும் வரவில்லை.சரி, யார் இந்த லலித் மோடி? 1. .பி.எல். கிரிக்கெட் விளை யாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் முறைகேடுசெய்தார் லலித் மோடி. இந்த விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு தொலைக்காட்சி உரிமம் அளிப்ப தில் மட்டுமே ரூ. 500 கோடி சுருட்டியிருக் கிறார்.2. மொரீஷியசைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ. 5000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் அனுமதித்துள்ளார் லலித் மோடி.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் லலித் மோடி மீதுஉள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒரு சிறுபகுதியே இது. இத்தகைய பேர்வழிக்குத் தான் `மனிதாபிமானஅடிப்படையில் உதவி செய்திருக்கிறார்கள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும்.இந்த இரண்டு முக்கியமான பாஜக தலைவர்களுடன் லலித் மோடிக்குள்ள உறவு என்ன? அவரே கூறுவதைக் கேட் போம்!“சுஷ்மா எனது குடும்ப நண்பர். அதைத்தாண்டி சட்ட ரீதியான உறவுஎங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்கு சட்ட ஆலோ சனை வழங்கி வருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.”இது லலித்மோடி அளித்த பேட்டி. அதாவது ரூ. 1700 கோடி ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட காலத்தில் இவரதுசட்ட ஆலோசகர்சுஷ்மாவின் கணவர்.
இராஜஸ்தான் முதல்வருடன் இவருக்கு இருக்கும் உறவு என்ன? அதையும்அவர் பேட்டியிலேயே கூறியிருக் கிறார்:“இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயின் குடும்பம் 30 ஆண்டுகளாக எனக்கு நெருக்கமான பழக்கம் உள்ள குடும்பமாகும். அந்த குடும்பத்துடன் குறிப்பாக அவருடைய மகன் துஷ்யந்துடன் எனக்கு தொடர்ந்து பணப்பரி வர்த்தனை உறவு உண்டு. சமீபத்தில் அவர் நடத்தி வரும் கம்பெனிக்கு ரூ. 12 கோடி பங்கு பணம் அளித்திருக்கிறேன்”.இந்த துஷ்யந்த் (ஊழலை ஒழிக்கத் துடிக்கும்) பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மற்றும் சுஷ்மாஆகியோருடன் லலித் மோடிக்கு இத்தகைய உறவு இருக்கும் நிலையில்தான், “இந்தியாவில் விசார ணைக்காகஇழுத்து வரப்பட வேண்டிய இவருக்கு இங்கிலாந்திலிருந்து போர்ச்சு கல் செல்ல சுஷ்மா உதவியுள்ளார்.இதே சுஷ்மா கடந்த காலத்தில் கர்நாடகத்தில் பல்லாயிரம் கோடி கொள் ளையடித்த ஜனார்த்தன்ரெட்டி சகோதரர்களுடனும்மனிதாபிமான உறவுகொண்டிருந்தார்; மக்கள் போராட் டம், நீதிமன்றத் தலையீடு விளைவாக ஜனார்த்தன் ரெட்டி 2011ல் சிறையில் அடைக்கப்படும் வரை இந்த உறவுதொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.எனவே இப்படிப்பட்ட லலித்மோடி யிடம் இராஜஸ்தான் முதல்வரும் அவரதுமகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கோடிகளில் பணம் பெற்றுள்ளனர் என்பது - ஏற்கத்தக்கதா, கடும் தண்டனைக் குரியதல்லவா என்பதே இன்றைய கேள்வி. இந்தப் பிரச்சனையில் சுஷ்மா சுவராஜ் மீதும், வசுந்தரா ராஜே மீதும் எந்தத் தவறும் இல்லை என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கிறது பாஜக. வழக்கம் போல் இந்த முடிவுக்கு வழிகாட்டியது ஆர்.எஸ்.எஸ். என்றும் தெரிவிக்கப்படுகிறது.எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம் சாட்டு கிறது பாஜக.ஆனால் பாஜகவை ஆதரிக்கிற கட்சி களைச் சார்ந்தவர்களே இது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஊழல் என்றும் - விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு என்றும் பேசுவதும் - எழுதுவதும் இப் பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒருபுறமிருக்கஊழல் எதிர்ப்பு மன்னன்”, பிரதமர் மோடி இதுவரை இந்தலலித் மோடிபிரச்சனையில் வாயே திறக்கவில்லை என்பது அவரின் ஊழல் எதிர்ப்புக்கு உதாரணமாக திகழ்கிறது.“மோடிக்கு மோடிவிட்டுக் கொடுக்கவேண்டும் என்று இப்படி நடக்கிறதா? அல்லது முக்கிய அமைச்சர் சுஷ்மா - முதலமைச்சர் வசுந்தரா ஆகியோரது நட வடிக்கையில்மோடிஅவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா? என்று சந்தேகங் கள் இன்று நாட்டில் விவாதப் பொருளா யிருக்கிறது.உலகமயம் என்று ஏழைகள் வயிற்றில்அடித்தல்; மதவெறியை அன்றாட நடவ டிக்கையாக்கி அமைதியைக் கெடுத்தல் என்பதுடன் சேர்ந்து அரசியலை வியா பாரம் ஆக்கும் ஊழல் அரசாகவும் பாஜக அரசு அம்பலப்பட்டிருப்பதற்குலலித்மோடிவிஷயமே சாட்சி!