Sunday 7 June 2015

லாபம் தனியாருக்கு நட்டம் மக்களுக்கு...

மோடி அரசாங்கம் பதவி ஏற்றபிறகு பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது மிகவும் வேகமாக நடைபெறுகிறது. எங்கும் தனியார்மயம்; எதிலும் தனியார் மயம் என்பதே மோடிஅரசாங்கத்தின் அணுகுமுறையாக உள்ளது.
மோடியின் ஆட்சியில் குறுகிய காலத்தில் சுமார் ரூ 25000 கோடிக்கு மேல் பொதுத்துறை பங்குகள்கீழ்கண்டவாறு விற்கப்பட்டுள்ளன.
நிலக்கரி நிறுவனம் - ரூ.22588 கோடி
எஃகு நிறுவனம் - ரூ.1720 கோடி
கிராமப்புற மின்மயம் நிறுவனம் (ஆர்இசி) - ரூ.1610 கோடி
மேலும் கீழ்கண்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது எனவும் மோடி அரங்கம் முடிவு செய்துள்ளது:
நிறுவனம் விற்கப்படும் பங்குகள்* நால்கோ (தேசிய அலுமினியக் கழகம்) - 5ரூ* டிசிஐஎல் (இந்திய அகழ்வுக் கழகம்) - 10ரூ* பெல் (பாரதமிகுமின் நிறுவனம்) - 5ரூ* ஓஎன்ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்) - 5ரூ* இந்தியன் ஆயில் - 10ரூ* தேசிய கனிமங்கள் மேம்பாட்டுக் கழகம் - 10ரூ* சட்லஜ் வித்யுத் நிகாம் லிமிடெட் - 10ரூ* இந்திய மாங்கனீசுத்தாதுக் கழகம் - 10ரூ* தேசிய நீர்மின் கழகம் - 10ரூ* பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் - 10ரூ* ஊரக மின் கழகம் - 10ரூ* ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் - 10ரூ* ராஷ்டிரிய இய்பட் நிகாம் லிமிடெட் - 10ரூ
பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளை மட்டும் இந்த ஆண்டு ரூ. 65,000 கோடிக்குவிற்பது என மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.மோடியின் தனியார்மயம் இத்துடன் நிற்கவில்லை. காப்பீட்டுத்துறையில் அந்நியமுதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கித்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் அலைபேசி சேவை செய்து வரும் BSNL  நிறுவனத்தை சீர்குலைத்திட அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன. ரயில்வேயில் பலபணிகள் தனியாருக்கு அளிக்கப்பட்டுவிட்டன.
எதிர்காலத்தில் அனைத்து ரயில்வே திட்டங்களும் பிபிபி (பொது - தனியார் கூட்டு) என்ற முறையில்- அதாவது தனியாரும் அரசுத்துறையும் இணைந்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிபிபியின் கடந்த கால அனுபவம் என்னவெனில் இலாபம் தனியாருக்கு நட்டம் அரசுக்கு என்பதுதான். பிபிபி என்பது தனியாரை ஊக்குவித்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகை உண்டாக்கும் செயல்தான்.

No comments: