Monday 1 June 2015

எல்லீஸ் நகரில் எளியமுறையில் சிறந்த பாராட்டு...

அருமைத் தோழர்களே ! 29.05.15 அன்று மாலை நமது அருமைத் தோழர் எம். முருகேசன், கிளைத் தலைவருக்கு நமது எல்லீஸ் நகர் கிளை சார்பாக  சிறந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. தோழர்.எம் முருகேசன் இம் மாதம் பணிநிறைவு செய்யும் 18 பேர்களில் ஒருவர் ஆவார்  ... நமது கே.ஜி..போஸ் அணியில் ஆரம்பம் முதற்கொண்டு இறுதிவரை அடிபிறழாமல் பணியாற்றிய அற்புதமான தோழருக்கு பாராட்டு விழாவில் மாவட்ட சங்கம் மனமுவந்து பாராட்டியது. சிறப்பான பாராட்டு விழாவை நடத்திய நமது எல்லீஸ் நகர் கிளை சங்கத்தை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. தோழர். எம். முருகேசன் பணிநிறைவு காலம்  அனைத்து வகையுலும்  மாவட்ட சங்கம் உளப் பூர்வமாக வாழ்த்துகிறது.
 --- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்...D/S-BSNLEU.

No comments: