Thursday 4 June 2015

ஓராண்டு ஆட்சி- ஓராயிரம் வேதனை வேலைவாய்ப்புகளும் . . .

ஓராண்டு ஆட்சி- ஓராயிரம் வேதனை வேலைவாய்ப் புகளும், மேக் இன் இந்தியாவும்! ஒரு விசித்திரக் கோமாளித் தனம்!மோடி ஆட்சி இந்திய மக்களுக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம், அது வேலைகளை உருவாக்குவதாக உறுதி அளித்ததுதான். கடந்த பொதுத்தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை ஏற்க நியமிக்கப்பட்ட பின்னர் 2013 ஆகஸ்ட்11ம்தேதியன்று திருவாளர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் பேரணியில் ஆற்றிய உரையில், இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலை இல்லாத் திண்டாட்டத்தை பற்றியும் காங்கிரஸ் ஆட்சி வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி விட்டதையும் சுட்டிக் காட்டினார். அன்றிலிருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தாம் பிரதமராக தேர்ந்தெடுக் கப்பட்டால் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தொடர்ந்து உறுதி அளித்தார்.பிரதமரான பிறகு தனது முதல் சுதந்திர நாள் உரையின்போது, ``இந்தியா வளர வேண்டுமென்றால் அதிகமான, மிக அதிகமான வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று, செங்கோட்டையிலிருந்து மோடி இடி முழக்கமிட்டார். “நமக்கு தொழில்மயமாக்குதல் தேவையாக உள்ளது; அப்போதுதான் மக்கள் வருமானமில்லாத விவசாயத்தை விட்டு, நல்ல வருமானம் அளிக்கும் தொழிற் சாலைகளுக்கு மாறுவார்கள்என்றார். ஆனால் எப்படி தொழில்மயமாதல் நடைபெறும் என்று அவர் விளக்க வில்லை.இதற்குப் பிறகு செப்டம்பர் 25ம்தேதியன்றுமேக் இன் இந்தியாபிரச்சாரம் அறிவிக்கப்பட்டது. வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவிற்கு அவசியம் வர வேண்டும்; அவர்கள் இங்கு உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும்; பொருட்களை உற்பத்தி செய்ய இளம் இந்தியர்களை வேலைக்கு நியமிக்க வேண்டும்; அவற்றை கம்பெனிகள் வெளிநாடுகளில் விற்றுக்கொள்ள வேண்டும் என்று மோடி அறிவித்தார்.இது ஒரு விசித்திரமான, கோமாளித்தனமான திட்டமாகும். இப்படியாக, ஓராண்டு கடந்து விட்டது. மோடி 18 நாடுகளுக்கு சென்று வந்துவிட்டார் . ‘மேக் இன் இந்தியாஎன்ற திட்டத்தில் ஒரு முதலீடும் அசைந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில், சிம்லாவிலுள்ள தொழிலாளர் அமைப்பு, எட்டு அடிப்படைத் தொழில்களான உடைகள் உள்ளிட்ட ஜவுளித்துறை, தோல், உலோகங்கள், ஆட்டோ மொபைல்ஸ், செயற்கை நவரத்தின கற்கள், நகைகள், போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம், பிபிஓ எனப்படும் கால் சென்டர்கள் மற்றும் கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றில் வேலைவாய்ப்பு மாற்றங்கள் எப்படி ஏற்பட்டுள்ளன என்பது குறித்து ஒரு காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.இது எந்தப் பக்கம் காற்று வீசுகிறது என்பதைத் தெளிவாக முன்வைக்கிறது.இந்த அறிக்கையின்படி, கடந்த 2014ல் 4.2 லட்சம் வேலைகள் உருவாகியுள்ளன. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த புதிதில் மீடியாக்களால் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கடந்த 2013ல் இதே 8 தொழில்களில் உருவாக்கப்பட்ட வேலைகள் 4.19 லட்சம் ஆகும். காங்கிரசிலிருந்து பாஜக எள்ளளவும் மாறுபட்டது அல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
மோடியின் மந்திரம் தோல்வியடைந்துவிட்டது. அவருடைய உறுதி மொழிகள் காங்கிரசைப்போன்று வெற்றுக்குடுவையாக மாறி விட்டன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் சந்தையில் 1.2 கோடிப் பேர் புதிய தொழிலாளர்களாக சேருகின்றனர். இந்நிலையில், வெறும் 4 லட்சம் புதிய வேலைகள் உருவாவது எந்த வகையிலும் உதவாது.
மீதமுள்ள மக்கள் என்ன செய்கிறார்கள்?
மிகக்குறைவாக கூலி வாங்கும் பணிகளில் தங்களது சகோதரர்களுடனும் ,சகோதரிகளுடனும்இணைந்து கொள்வார்கள். நகரங்களுக்கு இடம் பெயர்வார்கள். மோசமான நிலைமைகளில்வாழ்வார்கள். நோயையும், உடல் ஊனத்தையும், இயலாமையையும் எதிர்கொள்வார்கள்; அல்லது நிலங்களில் பசித்த வயிற்றுடன் பணிபுரிவார்கள்.போதிய வருமானத்திற்கு வழியில்லாத குறைந்த வேலை, போதிய வேலை கிடைக்காமலிருத்தல் ஆகியவையே இந்தியாவை பாதிக்கும் கொள்ளை நோயாக உள்ளது.மோடி ஒட்டு கேட்கும்போது இது அவருக்குத் தெரியாமல் இல்லை. அவர் இந்தியாவின் பரிதாப நிலைகுறித்து முதலைக்கண்ணீர் வடித்தார். பின்னர் அவர் தனது உறுதி மொழிகளை மறந்துவிட்டார். அதனால்தான் தனது துயரமான பாதையில் மக்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கும்போது அவரோ உலகம் சுற்றுகிறார். 4 கோடி ரூபாய்க்கு அறைகளை எடுத்துத் தங்குகிறார். உலகத் தலைவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்.
மோடியின் ஆட்சியில் தொழில் உற்பத்தி விரிவடைந்துள்ளதா?
தொழில் உற்பத்தி 2014-15 களில் 2.8 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளதாக அரசு புள்ளி விபரம் கூறுகிறது. கடந்த 2013-14ல் (-0.1விழுக்காடு); அதற்கு முந்தைய 2012-13 ஆண்டுகளில் (1.1 விழுக்காடு) இருந்தது. இவை காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த தேக்க நிலையாகும்.அது உயரவே இல்லை. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியில் உற்பத்தித் துறையானது 2.3 விழுக்காடுதான் உயர்ந்துள்ளது. சுரங்கத் தொழிலில் 1.4 விழுக்காடு கூடியுள்ளது. இது மிகவும் மந்தமான வளர்ச்சி ஆகும்.ஏப்ரலில் வெளியிட்டுள்ள அரசின் புள்ளி விபரங்கள் காட்டுவது, கடந்த 5 மாதங்களாக இந்தியாவின் ஏற்றுமதி இறங்குமுகமாகவே உள்ளது என்பதுதான். இது ஆச்சரியத்திற்குரிய விசயமல்ல;
ஏனெனில் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் நெருக்கடியின் பிடியில் இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும்.ஆனால், மோடி எப்படி வேலைகள் உற்பத்தி செய்யப்படும் என்று உறுதி மொழி அளிக்கிறார்? எப்போது அந்நிய முதலீட்டாளர்கள் மேக் இன் இந்தியா திட்டத்திற்குள் வருவார்கள்? அவர்கள் எப்போது ஏற்றுமதி செய்வார்கள்? சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் காட்டுவது என்னவென்றால், இந்தியாவில் அந்நிய நிதி முதலீடுகள் அதிகரித்து வரும் போக்கைப் பார்க்கலாம்.ஆனால் அதில் மிகவும் பெரும்பான்மையானது பங்குச் சந்தைக்கே சென்றுள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளுக்காக அல்ல.2014-15 ஆண்டில் 75 பில்லியன் டாலர்கள் (1பில்லியன் டாலர் =63953450000ரூபாய்) இதில் 40 பில்லியன் டாலர் (54 விழுக்காடு) பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2013-14 ஆண்டில் மொத்த அந்நிய முதலீடு 22 பில்லியன் டாலர்கள். அதில் 5 பில்லியன் (22 விழுக்காடு) டாலாகள் பங்கு சந்தையில் இடப்பட்டுள்ளது. எனவே, அந்நிய முதலீட்டை கொண்டுவருவதிலும் மோடி தோல்வியே அடைந்துள்ளார்.மாறாக, மோடியின் கார்ப்பரேட் ஆதரவு - மேற்கத்திய ஆதரவு வெற்றுப்பிரகடனங்கள் சூதாட்ட முதலீட்டாளர்களையே அழைத்து வந்துள்ளன. இவ்வகை முதலீடுகளினால் வேலைவாய்ப்புகள் உருவாகாது. மாறாக, உள்ளதையும் பறிக்கும்

No comments: