Sunday, 14 June 2015

ஜூன்-14 ரத்த கொடையாளர் தினம் . . .

அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாகப் பல்வேறு புதிய மருத்துவ வசதிகள் மனித சமுதாயத்திற்கு கிடைத்தபோதிலும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சகமனிதருக்கு, எவ்வளவு விலை உயர்ந்த பொருளையும் உடலில் செலுத்தி உயிரை காப்பாற்ற முடியாது. சக மனிதர்களின் ரத்தம் மட்டுமே இழந்த ரத்தத்தை ஈடுசெய்ய முடியும். ரத்தத்திற்கு மாற்றுப்பொருள் கிடையாது.குருதிக் கொடையாளரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும் ரத்த அழுத்தம் மேல் அளவு 100-140ம், கீழ் அளவு 60-90 இருக்க வேண்டும். 18 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ஒருவரின் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு 6000 மி.லி. தானம் புரியும் போது எடுக்கப்படும் அளவு 350 மி.லி. மட்டுமே. ரத்ததானம் புரிய 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
நமது நாட்டிற்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அளவு ரத்தம் 4 கோடி யூனிட். ஆனால், நம்மிடம் இருப்பதோ 4 லட்சம் யூனிட் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள்தோறும் அல்லது கியூமோ தெரபி சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு 2 நொடிக்கும் ஏதேனும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒருவர் வழங்கும் ரத்ததானம், 3 பேரின் உயிரைக் காக்கும் வல்லமை உள்ளது. ரத்ததானம் புரிவதன் நோக்கமே மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கு மட்டுமே. ரத்ததானம் வழங்காமல் இருப்பவரின் உடலில் உள்ள ஒருபகுதி ரத்தம், தானாகவே அழிந்து, புதிய ரத்தம் உற்பத்தியாகிறது. எனவே, தேவையின்றி அழியும் ரத்தத்தை, சகமனிதர்களுக்கு தானமாக வழங்கலாம். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம்.

No comments: