Tuesday, 2 June 2015

முன்னறிவிப்பு எதுவுமின்றி சிலிண்டர் விலை ரூ.10 உயர்வு.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பெட் ரோலிய நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தி அறிவித்துள்ளன. வீட்டு உபயோகத்திற் கான 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண் டரின் சந்தை விலை ரூ.609.50ஆக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.10 அதிகரித்து மொத்தமாக ரூ.620 ஆக உள் ளது. ஓட்டல்களில் பயன் படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1319ல் இருந்து ரூ.1337 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு உடனடியாக திங்கள் முதல் அமலுக்கு வந்தது.இதுகுறித்து பெட் ரோலிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தி யில், சவூதி அம்ரோன் கோ என்ற நிறுவனம் ஆசிய நாடுகளுக்கு விநியோகித்து வரும் சிலிண்டர்களுக்கான எரிவாயு விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து இந்தியாவில் சிலிண்டர் எரிவாயு விலை உயர்த்தப்பட் டுள்ளது என்று குறிப்பிட் டுள்ளன.சமையல் எரிவாயு சப்ளை செய்யும் இந்தி யன் ஆயில், பாரத் பெட் ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் 18 கோடிக்கும் அதிக மான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள் ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments: