Tuesday 16 June 2015

செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் வெற்றி பெறச் செய்வீர்!



BJP தலைமையிலான மோடிஅரசு பின்பற்றி வரும் நாசகர பொருளாதார கொள்கையை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள செப்டம்பர் 2- தேசந்தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய தமிழக உழைப்பாளி மக்களை CITU கேட்டுக் கொள்கிறது.CITU தமிழ் மாநிலக்குழு கூட்டம் ஜூன் 13-14 ஆகிய தேதிகளில் தேனிமாவட்டம், பெரியகுளத்தில் மாநிலத்தலைவர் .சவுந்தரராசன் MLA தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச் செயலாளர்கள் வி.குமார், ஆர்.கருமலையான்,கே.திருச்செல்வன், துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செப்.2 வேலைநிறுத்தம்: 11 மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் துறைவாரியான ஊழியர் சம்மேளனங்களும் இணைந்து மே 26ல் புதுதில்லியில் நடத்திய தேசிய கருத்தரங்கத்தில்செப்.2ல் தேசந்தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன.இந்த அறைகூவலை ஏற்று தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை பெரும் வெற்றி பெற செய்யவேண்டுமென சிஐடியு மாநிலக்குழு உழைப்பாளி மக்களை கேட்டுக்கொள் கிறது.2014 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பி.ஜே.பி. தலைமையிலான மோடிஅரசு ஓராண்டு நாட்டை சீரழிவு பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இந்த ஓராண்டு காலத்தில் பாதிக்கப் படாத பிரிவினரே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து தரப்புமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், தொழில் மந்தம் கடும்பிரச்சனையாக மாறியுள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்கூட அதன் பலன் மக்களுக்கு போய்சேரவில்லை. கனிம வளங்கள், இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு பெருமுதலாளிகள் - கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்தாக மாற்றப்படுகிறது.அனைத்து விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசர சட்டமாக மீண்டும் கொண்டுவர துடிக்கும் மோடி அரசு, தொழிலாளர்நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது. தொழில்தாவா சட்டம்,ஒப்பந்த தொழிலாளர் சட்டம், பயிற்சியாளர் சட்டம்,தொழிற்சாலை சட்டம், தொழிற்சங்கங்கள் சட்டம் உட்பட அடிப்படை தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு பாதகமான வகையில் மாறுதல்களை கொண்டுவந்துள்ளன. இந்த மாறுதல்கள் மூலம்அமர்த்து;துரத்துகொள்கை அமலாக்கப்படுகிறது.
பிரதான துறைமுகங்கள் மற்றும் தபால்சேவை போன்றவைகளை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்க துடிக்கும் மோடி அரசு, ரயில்வே, பாதுகாப்பு, இன்சூரன்ஸ் துறைகளில் அந்நியநேரடி மூலதனத்தை தாராளமாக்குவது போன்ற மக்கள் விரோத-தொழிலாளர் விரோதநடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை சிஐடியு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஒட்டுமொத்த தேச பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மோடி,ஆட்சிக்கு வந்த நாள் முதலாக உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும், உரிமைகள் மீதான தாக்குதலைமுழு அளவில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. எனவே மோடி அரசின் நாசகர உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள தேசந்தழுவிய போராட்டத்தைவெற்றிபெறச் செய்ய வேண்டுமென தமிழகத்தில் அனைத்து தரப்பு உழைப்பாளி மக்களையும் CITU மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது.தமிழகத்தில் அணைகள், ஏரி,குளங்களில் மீன்பிடி தொழில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்பட்டு வந்தது. மீன்துறை மூலம் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் ஏலம் எடுத்து மீன்பிடித்தலை செய்து வந்தனர்.பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களாக பாரம்பரியமாக செய்து வந்தனர். தற்போது பொதுப்பணித்துறை மூலம் மீன்பிடிப்பு நடைபெறுகிறது.இதனால் உள்நாட்டு மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.எனவே தமிழக அரசு ஆறு,குளங்களில் மீன்பிடிப்பதை மீன்துறை மூலமே நடத்திடவேண்டும்.மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்துகிறது.தமிழக உள்ளாட்சி தொழிலுக்கு 1977-ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதியம்நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்பின் கடந்த 37 ஆண்டுகளாக ஊதியம்மறு நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படவில்லை.சிஐடியு எடுத்த முயற்சிகளின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மதுரை தொழிலாளர் துணைஆணையர் தலைமையில் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு, குழுவும் தனது சிபாரிசுகளை தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.ஆகவே உள்ளாட்சி தொழிலுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளை உடனடியாக அமலாக்க தமிழக அரசைCITU வலியுறுத்துகிறது.

No comments: