மொத்தம் 16 வழக்குகளை சந்திக்கும் லலித்மோடி சந்தோஷமாக உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். லண் டனை மையமாகக் கொண்டு வசித்து வரும் லலித் மோடி மீது அந்நியச் செலா வணி மோசடி தொடர்பான வழக்குகள் காரணமாக ரூ.1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தி ருக்கிறது. இதில் ஒரு பைசா கூட அவர் அபராதம் கட்டவில்லை; விசாரணையை சந்திக்கவும் வரவில்லை.சரி, யார் இந்த லலித் மோடி? 1. ஐ.பி.எல். கிரிக்கெட் விளை யாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் லெவன் அணி ஏலத்தில் முறைகேடுசெய்தார் லலித் மோடி. இந்த விளையாட்டை ஒளிபரப்பு செய்வதற்கு தொலைக்காட்சி உரிமம் அளிப்ப தில் மட்டுமே ரூ. 500 கோடி சுருட்டியிருக் கிறார்.2. மொரீஷியசைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ. 5000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு பைசா கூட முன்பணம் வாங்காமல் அனுமதித்துள்ளார் லலித் மோடி.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல் லலித் மோடி மீதுஉள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒரு சிறுபகுதியே இது. இத்தகைய பேர்வழிக்குத் தான் `மனிதாபிமான’ அடிப்படையில் உதவி செய்திருக்கிறார்கள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும்.இந்த இரண்டு முக்கியமான பாஜக தலைவர்களுடன் லலித் மோடிக்குள்ள உறவு என்ன? அவரே கூறுவதைக் கேட் போம்!“சுஷ்மா எனது குடும்ப நண்பர். அதைத்தாண்டி சட்ட ரீதியான உறவுஎங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்கு சட்ட ஆலோ சனை வழங்கி வருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.”இது லலித்மோடி அளித்த பேட்டி. அதாவது ரூ. 1700 கோடி ஊழல் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட காலத்தில் இவரது “சட்ட ஆலோசகர்” சுஷ்மாவின் கணவர்.
இராஜஸ்தான் முதல்வருடன் இவருக்கு இருக்கும் உறவு என்ன? அதையும்அவர் பேட்டியிலேயே கூறியிருக் கிறார்:“இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயின் குடும்பம் 30 ஆண்டுகளாக எனக்கு நெருக்கமான பழக்கம் உள்ள குடும்பமாகும். அந்த குடும்பத்துடன் குறிப்பாக அவருடைய மகன் துஷ்யந்துடன் எனக்கு தொடர்ந்து பணப்பரி வர்த்தனை உறவு உண்டு. சமீபத்தில் அவர் நடத்தி வரும் கம்பெனிக்கு ரூ. 12 கோடி பங்கு பணம் அளித்திருக்கிறேன்”.இந்த துஷ்யந்த் (ஊழலை ஒழிக்கத் துடிக்கும்) பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். இராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா மற்றும் சுஷ்மாஆகியோருடன் லலித் மோடிக்கு இத்தகைய உறவு இருக்கும் நிலையில்தான், “இந்தியாவில் விசார ணைக்காக” இழுத்து வரப்பட வேண்டிய இவருக்கு இங்கிலாந்திலிருந்து போர்ச்சு கல் செல்ல சுஷ்மா உதவியுள்ளார்.இதே சுஷ்மா கடந்த காலத்தில் கர்நாடகத்தில் பல்லாயிரம் கோடி கொள் ளையடித்த ஜனார்த்தன்ரெட்டி சகோதரர்களுடனும் ‘மனிதாபிமான உறவு’கொண்டிருந்தார்; மக்கள் போராட் டம், நீதிமன்றத் தலையீடு விளைவாக ஜனார்த்தன் ரெட்டி 2011ல் சிறையில் அடைக்கப்படும் வரை இந்த உறவுதொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.எனவே இப்படிப்பட்ட லலித்மோடி யிடம் இராஜஸ்தான் முதல்வரும் அவரதுமகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கோடிகளில் பணம் பெற்றுள்ளனர் என்பது - ஏற்கத்தக்கதா, கடும் தண்டனைக் குரியதல்லவா என்பதே இன்றைய கேள்வி. இந்தப் பிரச்சனையில் சுஷ்மா சுவராஜ் மீதும், வசுந்தரா ராஜே மீதும் எந்தத் தவறும் இல்லை என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கிறது பாஜக. வழக்கம் போல் இந்த முடிவுக்கு வழிகாட்டியது ஆர்.எஸ்.எஸ். என்றும் தெரிவிக்கப்படுகிறது.எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மீது குற்றம் சாட்டு கிறது பாஜக.ஆனால் பாஜகவை ஆதரிக்கிற கட்சி களைச் சார்ந்தவர்களே இது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஊழல் என்றும் - விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு என்றும் பேசுவதும் - எழுதுவதும் இப் பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒருபுறமிருக்க “ஊழல் எதிர்ப்பு மன்னன்”, பிரதமர் மோடி இதுவரை இந்த“லலித் மோடி” பிரச்சனையில் வாயே திறக்கவில்லை என்பது அவரின் ஊழல் எதிர்ப்புக்கு உதாரணமாக திகழ்கிறது.“மோடிக்கு மோடி” விட்டுக் கொடுக்கவேண்டும் என்று இப்படி நடக்கிறதா? அல்லது முக்கிய அமைச்சர் சுஷ்மா - முதலமைச்சர் வசுந்தரா ஆகியோரது நட வடிக்கையில் “மோடி” அவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா? என்று சந்தேகங் கள் இன்று நாட்டில் விவாதப் பொருளா யிருக்கிறது.உலகமயம் என்று ஏழைகள் வயிற்றில்அடித்தல்; மதவெறியை அன்றாட நடவ டிக்கையாக்கி அமைதியைக் கெடுத்தல் என்பதுடன் சேர்ந்து அரசியலை வியா பாரம் ஆக்கும் ஊழல் அரசாகவும் பாஜக அரசு அம்பலப்பட்டிருப்பதற்கு “லலித்மோடி” விஷயமே சாட்சி!
No comments:
Post a Comment