Saturday 31 January 2015

01.12.15 SNEAமாவட்ட மாநாடும், Com.S.கணேசன் பாராட்டும்...

மதுரை  SNEA மாவட்ட மாநாடும் , அருமைத் தோழர்  Com.S.கணேசன், SNEA மாநில உதவிச் செயலர்  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் எல்லாவகையி லும்  வெற்றி பெற தோழமை பூர்வமான வாழ்த்துக்களை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது.
அருமைத் தோழர்களே ! மதுரை  SNEA மாவட்ட மாநாடும், எமது  அருமைத் தோழர்  Com.S.கணேசன், SNEA மாநில உதவிச் செயலர்  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் 01.02.2015 ஞாயிறு  காலை 10 மணிமுதல் மதுரை வேலாயுத நாடார் - விசாலாட்சி மண்டபத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது ...நமது வாழ்த்துக்களும்....... பாராட்டுக்களும்....
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

30.01.2015 கடலூர் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சிகள் ...

Displaying DSC_4141.JPGDisplaying DSC_4200.JPGDisplaying DSC_4169.JPGDisplaying DSC_4152.JPGDisplaying DSC_4175.JPGDisplaying DSC_4216.JPGDisplaying DSC_4258.JPGDisplaying DSC_4230.JPGDisplaying DSC_4211.JPGDisplaying DSC_4146.JPG

கார்டூன் . . . கார்னர் . . .


30.01.2015 கடலூர் நகரமே BSNL கடல்மையமானது . . .

அருமைத் தோழர்களே ! கடல் சிறுத்ததோ என்று அனைவரும் பேசும் அளவிற்கு  கடலூரில் எங்கு நோக்கினும் BSNL ஊழியர்களும், ஆதிகாரி களும்  நிரம்பி வழிந்த காட்சியில்  30.01.2015 கடலூர்  நகரமே BSNL கடல் மையமானது  என்றால் அது மிகையாகாது . . . " SAVE BSNL" என்ற ஒரே உன்னத கோஷத்தோடு, தேசபக்த உனர்வோடு தமிழகம் முழுவதும்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் சங்க பேதமின்றி கடலூர் சுப்புராயலு மண்டபத்தில் கூடிய காட்சி காண கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கை எந்த குறையும் இன்றி கடலூர் அனைத்து மாவட்ட சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது என்பது மிக பாராட்டுக்குரிய விஷயம். இந்த ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் BSNLEU மதுரை மாவட்டசங்கம்மனதாரபாராட்டுகிறது.
பல ஆயிரம் பேர் கூடிய சிறப்பு கருத்தரங்கிற்கு BSNLEU மாநிலத் தலைவர் தோழர் எஸ். செல்லப்பா உள்ளிட்டு அனைத்து சங்க மாநில தலைவர்களும் கூட்டு தலைமை பொறுப்பேற்க, கடலூர் NFTE மாவட்ட செயலர் தோழர்.ஸ்ரீதர், வரவேற்புரை நிகழ்த்தினார்.BSNLEU மாநில செயலர் தோழர்.எ. பாபு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சங்க மாநில செயலர்களும் கருத்துரை வழங்கினர். 
அதன் பின் BSNLEU பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு,  NFTE பொதுச் செயலர் தோழர்.சி .சந்தேஸ்வர் சிங் , SNEA பொதுச் செயலர் தோழர். கே.செபஸ்டியான், AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர்.பி. வேணுகோபால்  ஆகிய அனைத்து அகிலஇந்திய தலைவர்களும், கருத்தரங்கத்தின் நோக்கம், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, BSNL தலைமையக நிர்வாகத்தின் அக்கறையற்ற அலச்சிய போக்கு ஆகியவைகள் குறித்தும் நமது தொடர் முயற்ச்சி, இயக்கங்கள் குறித்தும், பொதுமக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டிய கடமை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டியதில்  முதற்கட்டமாக  கருத்தரங்கத்தில் 1,60,000 கையெழுத்து பெற்ற படிவங்களை அனைத்து மத்திய சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் 25.02.2015 டெல்லி நோக்கிய பேரணியையும், 17.03.2015 முதல் இந்திய நாடு முழுவதும் மத்திய அரசிற்கு நமது உணர்வுகளை உணர்த்தும் முகத்தான் ஒன்றுபட்ட காலவரையற்ற வேலைநிறுத்த தயாரிப்புகளையும் சக்தியாக நடத்திட உறுதி பூணப்பட்டது. இறுதியாக BSNLEU கடலூர் மாவட்ட செயலர் தோழர்.K.T.சம்பந்தம் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.குறிப்பு: நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் சார்பாக மட்டும் கடலூரில் நடைபெற்ற 30.01.2015 சிறப்பு கருத்தரங்கத்தில் 67 பேர் கலந்து கொண்டனர்.-- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன், --D/S-BSNLEU.

Thursday 29 January 2015

ஜனவரி - 30 மகாத்மாகாந்தி படுகொலை -நினைவு நாள்...

ஜனவரி 30, 1948 – அன்று காந்தி கொல்லப்படுவதற்கு இருபது நாளுக்கு முன்பே கோட்சே உள்ளிட்ட குழு காந்தியை அதே இடத்தில் கொல்ல முயன்றுள்ளது. கையெறி குண்டுகளை வீசி விட்டுத் தப்பி ஓடும் போது மதன்லால் என்கிற நபர் மட்டும் மாட்டிக்கொள்ள மற்றவர்கள் தப்பி விட்டனர். போலீஸ் மதன்லாலிடம் விசாரித்தபோது அவர் நான்கைந்து பேர் சேர்ந்து காந்தியைக் கொல்லத் திட்டம் தீட்டியதைச் சொல்லி விட்டார். ஆனால் டில்லி போலீஸ் மற்றும் மும்பைபோலீஸ் மிகத் தீவிரமாக இயங்கி குற்றவாளிகளை அடுத்த பத்து நாளைக்குள் பிடிக்கத் தவறி விட்டது.* காந்தி உயிருக்கு ஆபத்து என்று அறிந்து அவருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீஸ் சொன்னதை காந்தி ஏற்கவில்லை..கோட்சே முதலில் காந்தியின் கொள்கைகளை விரும்பிய மனிதனாக இருந்தார் என்று அறிய ஆச்சரியமாக உள்ளது. பின் ஹிந்துக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சாவர்கர் என்கிற நபரின் follower ஆகி விட்டார் கோட்சே.* நாராயண ஆப்தே மற்றும் விஷ்ணு கார்கரே ஆகிய இருவரும் கோட்சே காந்தியைச் சுட்டபோது அவர் உடன் இருந்த நபர்கள். இதில் நாராயண ஆப்தேக்கு தூக்கு கிடைத்தது. கார்கரே உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. .* காந்தியைக் கொல்ல ஒரு நாளுக்கு முன் கோட்சே தன்னுடன் இருக்கும் கார்கரே மற்றும் ஆப்தேக்கு ஒரு கடிதம் எழுதி அவர்கள் ஊரான மகாராஷ்டிராவுக்கு அனுப்புகிறார். காரணம் அவர்கள் தன்னுடன் இல்லை; ஊரில் இருந்தார்கள் என்று நிரூபிக்க! வழக்கு நடக்கும் போதும்நான் தான் கொன்றேன்; அவர்கள் உடன் இல்லைஎன கோட்சே வாதிட்டாலும்போலீஸ் ஆதாரத்துடன் அவர்களும் உடன் இருந்ததை நிரூபிக்கிறது.* காந்தியைக் கொல்லப் போகும் முன் முதலில் பர்தா அணிந்து போகலாம் என புது பர்தா வாங்கி முயன்றுள்ளனர். பின் அது சரியாக இல்லை என கோட்சே கூறி ராணுவ வீரன் போன்ற உடை அணிந்து சென்றுள்ளனர். கொல்லும் முன் கோட்சே உப்புக் கடலை சாப்பிட ஆசைப்பட, பல இடத்தில் கிடைக்காமல் கடைசியாய் அவருக்கு உப்புக் கடலை வாங்கித் தந்துள்ளனர் அவருடன் இருந்தவர்கள்.* குறிப்பிட்ட தினத்தன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வரும் போது கோட்சே சுட வேண்டும் என்று காத்திருக்க, காந்தி உள்துறை அமைச்சர் பட்டேலுடன் தீவிர ஆலோசனையில் இருந்துள்ளார். பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அப்போது ஏதோ கருத்து வேறுபாடு. அது பற்றி காந்தியிடம் பேசியுள்ளார் பட்டேல். பட்டேலுடன் பேசியதில் பிரார்த்தனை கூட்டத்துக்கு நேரமாகி விட்டது என்று அவசரமாகக் குறுக்கு வழியில் காந்தி சென்றுள்ளார். காந்தியை மேடையில் வைத்துத்தான் சுட கோட்சே எண்ணியுள்ளார். ஆனால் காந்தி வழக்கமாய்ச் செல்லும் வழியை விடுத்து, கோட்சே நின்ற இடம் வழியே செல்ல, அங்கேயே அவரைச் சுட்டார் கோட்சே. மூன்று குண்டுகள் மகாத்மா மார்பைத் துளைக்க அங்கேயே இறந்து விட்டார். சுட்ட கோட்சே கைகளைத் தூக்கியவாறு, “போலிஸ்.. போலிஸ்என்று கத்தியுள்ளார். மக்கள் வந்து அடித்து விடுவார்களே என்று தான் அவர் போலிசை அழைத்துள்ளார்.* காந்தி இறந்த அன்று ரேடியோவில் காந்தியை ஒரு இந்து சுட்டுக் கொன்றார் என்று திரும்பத் திரும்ப அறிவித்துள்ளனர். அந்த நேரம் இந்து- முஸ்லீம் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்க, காந்தியை ஒரு முஸ்லீம் கொன்றார் என்று மக்கள் நினைத்தால் பிரச்சனை பெரிதாகுமே என்று தான் இப்படி அறிவித்துள்ளனர்..

31.01.2015 - பணி நிறைவு பாராட்டு விழா . . .

அன்பிற்கினியவர்களே ! 
2015-ம் வருடத்தின் முதல் மாதமான ஜனவரி 31.01.2015 -அன்று
 நமது மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில், 
மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் காலை 11 மணிக்கு   பணி  நிறைவு பாராட்டு விழா நடை பெற உள்ளது  . . .  

31.01.2015 பணி நிறைவு செல்லும் தோழர்கள்.
 
  1.  S.K. அமீர் பாட்ஷா , TM / NCR
  2.  P.பாலகிருஷ்ணன், TM / EMM
  3.  S.கணேசன், SDE / GMO 
  4.  R.ரவிச்சந்திரன், STM / CSC 
  5.  M.சண்முகம், TM / DDG 
  6.  N.உமாபதி , TM / TKM

பணி நிறைவு செய்யும், அன்புக்குரிய  அனைத்து தோழர்களின் பணி நிறைவு காலம் எல்லா வகையிலும் சிறக்க வேண்டுமென நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது... 
என்றும் தோழமையுடன், 
எஸ். சூரியன்.

வயதோ 17...தான், வாங்கிய சான்றிதழ்கள் 700 ...!

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை' என்பதற்கேற்ப பல துறைகளிலும் முத்திரைப் பதித்து வருகிறார், பன்முகத்திறமைக் கொண்ட பூர்ணிமா முருகேசன். வயதோ 17, ஆனால் வாங்கிய சான்றிதழ்கள் மட்டுமே 700, இதைத் தவிர வென்ற கோப்பைகளும் வாங்கிய பட்டங்களும் 250 – எட்டுகின்றன.இரண்டரை வயதில் நடனத்தோடு தொடங்கிய இவரது கலைப் பயணம், இன்று வரை தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈவினிங் காலேஜூ முடிந்து வந்த களைப்பு கூட இல்லாமல் நம்முடன் பொறுமையாகப் பேசினார் பூர்ணிமா.பிறந்தது திருநெல்வேலி, வளர்ந்தது படிச்சது எல்லாம் புதுச்சேரிதான். எங்க அம்மா அப்பாதான் எனக்கு முழு சப்போர்ட். சின்ன வயசுல நாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சேன் ,அப்புறம்  படிப்படியாக முன்னேறி வாய்பாட்டு, நடனம், நடிப்பு, ஸ்கேட்டிங், (ஸ்கேட்டிங் வித் டான்ஸ்), விளையாட்டு, வீணை , போட்டோகிராபி, என எல்லா துறைகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகள் வாங்கிருக் கேன். நிறைய கலைகள் கற்றாலும் எனக்கு ஒரு வரப்பிரசாத மாய் வந்த கலை வீணைதான். சின்ன வயசுல என் அம்மா வாசிப்பதை பார்த்து வீணை மேல் வந்த ஆர்வம்தான் எனது 8ஆம் வயதிலயே என்னை மேடை ஏற வைத்தது " என்கிறார்இப்பொழுது ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்துக் கொண்டு இருக்கிறார் பூர்ணிமா. இவரது பன்முகத்திறன்களைக் கண்டு அக்கல்லூரி மூன்று வருட படிப்பையும் முழு ஸ்காலர்ஷிப்பில் படிக்க சலுகைகொடுத்துள்ளது.புதுவை முதல் திருநெல்வேலி வரை கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட கோவில்களிலும், 50-க்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும் வீணை வாசித்துள்ளார் . அது மட்டுமல்லாமல் தூர்தர்ஷன், பொதிகை  என பல தொலைகாட்சிகளிலும் இவரின் இசைக் கச்சேரி ஒளிபரப்பாகி உள்ளதுஎப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்கும் பூர்ணிமாவிடம், இரண்டு தனித்தன்மை வாய்ந்த விஷயங்கள்உள்ளன.முதல் விஷயம், பொதுவாக வீணை வாசிப்பவர்கள்  2.5 முதல் 3 கட்டைகள் வரைதான் வாசிப்பார்கள். ஆனால் பூர்ணிமாவோ தன் குருவைப் போலவே 5.5 ( ஐந்தரை கட்டையில்) வாசித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
இரண்டாவது விஷயம், ரசிகர்கள் கேட்கும் சினிமா பாடல்களை எந்த குறிப்புகளும் இன்றி அப்படியே வாசிக்கும் இவரது அபாரத் திறமை.12.12.2012 அன்று 12 பேர்கொண்ட குழுவாக அமர்ந்து கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் வீணை வாசித்து ஒரே நேரத்தில் எலைட்டு, யூனிக், ஏசியன், இந்தியன், தமிழன் உள்ளிட்ட 5 சாதனை புத்தகங்களிலும் இடம் பெற்று உள்ளார்.பொதுவாக நவராத்திரியின் பொழுது வீடுகளில் பொம்மைகள்தான் கொலுவாக இருக்கும், ஆனால் இவரது வீட்டிலோ இவர் வாங்கிய 700 சான்றிதழ்களும் 250 கோப்பைகளும்தான் சூழ்ந்துள்ளது.உங்கள் வெற்றியின் ரகசியம் தான் என்ன?என் பெற்றோர்தான் என் வெற்றியின் ரகசியம். நான் எல்லா துறைகளிலும் தடம்பதிக்க ரொம்ப ஊக்கம் கொடுத்தாங்கஎன்னைப் பொறுத்தவரை நான் எந்தத் துறையில இறங்கினாலும் அதில் முழு கவனத்துடன் ஈடுபடுவேன். இன்னும் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு; ஆய கலைகள் 64-யும் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்குஇதுமட்டும் இல்லாம எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி IFS ஆகி நம் நாட்டுப் பண்பாட்டையும், முக்கியமாக இசையையும் உலகமெங்கும் பரப்ப ஆசை. ஓர் உலகத் தரத்திலான பள்ளி ஆரம்பித்து அதில் படிப்பு முதல் அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க ஆசை. இதையும் செய்து முடிப்பேன்!'எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ணமாட்டோமா??' என்று  புன்னகையுடன்  விடை கொடுக்கிறார் பூர்ணிமா...  பூர்ணிமாவை வாழ்த்துவோம்..!

நமது CHQ டெலிகுருசேடர் பத்திரிக்கை செய்தியின் தமிழாக்கம்.

அருமைத் தோழர்களே! நமது இந்தியாவின் குடியரசு தினத்திற்கு, அமெரிக்காவின் ஒபாமாவின் வருகை என்பது - இந்தியர்களாகிய நமக்கு பெருமையான விஷயமே அல்ல... இது குறித்து நமது CHQ டெலிகுருசேடர் பத்திரிக்கை செய்தியின் தமிழாக்க த்தை  நமது தமிழ் மாநில சங்கம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது ....  

தமிழகத்தில் 28.01.2015 முதல் முழுமையாக ERPஅமுலாக்கம். . .

அருமைத் தோழர்களே ! தோழியர்களே ! !,
நமது தமிழ் மாநிலம் முழுவதும் ஏற்கனவே, பெயரளவில் செயல்பட்டு வந்த ERP திட்டம் 28.01.2015  முதல் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த (ERP) திட்டத்தின் மூலம் அனைத்து  ஊழியர்களும், அதிகாரிகளும்  தங்களுடைய சுயவிவரங்களை தாங்களே அறிந்து கொள்வதோடு தங்களுடைய (PAYஊதியம்(GPF) சேமநல நிதி மற்றும் பணபரிவர்தனைகள், அனைத்து வகையிலான (LEAVEவிடுப்பு, அனைத்து (SELF DETAILS)  சுய விவரங்கள் மற்றும்  (IN&OUTPATIENT BILL CLAIMSஉள் வெளி மருத்துவ பில்கள்,ஆகியவற்றை ஊழியர்களே இணையதளம் மூலம் அறிந்து கொள்ளவும் புதியதாக விண்ணப்பிக்கவும் முடியும் இணையதள முகவரி   http//www.eportal.erp.bsnl.co.in ஆகும்.
குறிப்பு :- இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (INTERNET EXPLORER BROWSER)  இணைய தள உலாவியை பயன்படுத்தவும்.--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்...D/S-BSNLEU.