Thursday, 22 January 2015

22.01.2015 மதுரை SSA-யில் கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான, சட்டப்படியான சம்பளத்தை பிரதிமாதம் 7-ம். தேதிக்குள் வழங்க வேண்டுமென்ற உத்தரவு இருந்தும், டிசம்பர்-2014 சமபத்தை இது  நாள் வரை வழங்காததை கண்டித்து 
மாநிலந் தழுவிய அறைகூவலுக்கு இணங்க 22.01.2015 அன்று மதுரை SSA-யில் MADURAI - DINDUGUL - THENI ஆகிய  3 இடங்களிலில் BSNLEU மற்றும்  TNTCWU இரு சங்கங்கள் சார்பாக கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டம் மிக சக்தியாக நடைபெற்றது ...
மதுரையில் தல்லாகுளம், லெவல்-4, வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர்கள், கே. விரபத்திரன் , எஸ். மனுவேல் பால்ராஜ் ஆகிய இருவரும் கூட்டுத் தலைமை ஏற்று நடத்தினர். கோரிக்கைகளை விளக்கி தோழர்கள், என். சோனை முத்து, எ. அன்பழகன் ஆகியோர் பேசினர். ஆர்பாட்டத்தில் தோழர்  எஸ். சூரியன் நிறைவுரை நிகழ்த்தினார். தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற கூட்டம் இனிதே கூட்டம் நிறைவுற்றது.
திண்டுக்கலில் நடைபெற்ற கண்கட்டி ஆர்பாட்டத்திற்கு தோழர். எ. ஞான சுந்தரம் தலைமை தாங்க, தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா, சி.செல்வின் சத்தியராஜ், ஜே. ஜோதிநாதன், எஸ். பரிமள ரெங்கராஜ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். தோழர்.எ.குருசாமி நன்றி கூறி ஆர்பாட்டத்தை முடித்து வைத்தார்.
தேனீ மாவட்டத்தில்  உள்ள போடி தொலை பேசி அலுவலகத்தில் நடைபெற்ற தார்னாவில்  தோழர். ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோரிக்கையை விளக்கி தோழர்கள் பி. சந்திர  சேகர், கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக தோழர்.அருண் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
23.01.2015 தினமலர் 

No comments: