Friday 23 January 2015

ரயில்வேயில் தனியார்மய- எதிர்ப்பு மதுரையில் மனிதச்சங்கிலி.

மதுரை, ஜன.22- ரயில்வேதுறை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்தும், ரயில்வே துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள நூறு சதவித அந்நிய முதலீட்டைக் கண்டித்தும் மதுரையில் தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் (டிஆர்இயு) சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.மத்திய ரயில்வே துறையைதனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது. தென்னக ரயில்வே முழுவதையும் தனியாருக்குத் தாரை வார்க்கவும், பிரிமியம்ரயில் என்ற பெயரில் மறைமுகக் கட்டணத்தை உயர்த்தவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.மத்திய அரசின் தனியார்மயக்கொள்கைகளுக்கு எதிராக டிஆர்இயு சார்பில் மதுரையில் மனிதசங்கிலி போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் திருமலை அய்யப்பன் தலைமை வகித்தார். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்டப்பொதுச்செயலாளர் நா.சுரேஷ்குமார் துவக்கவுரையாற்றினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சூரியன்,பெபி மாவட்டத்தலைவர் எல்.ராமசாமி, ஏஐஎஸ்எம்ஏ கோட்டத்தலைவர் பி.ஆனந்த், ஏஐஎல்ஆர்எஸ்ஏ இணைச்செயலாளர் கண்ணன், ஏஐஜிசி கோட்டத்தலைவர் ஆர்.உதயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் பா.விக்ரமன் நிறைவுரையாற்றினார். டிஆர்இயூ கோட்டச் செயலாளர் ஆர்.சங்கர நாராயணன் நன்றி கூறினார்.DREU-CITU போராட்டம் வெற்றி பெற BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது. 

No comments: