அன்பிற்கினியவர்களே ! மதுரை தல்லாகுளம் பகுதி லெவல்-4 பகுதியை மக்கள் மயமாக்கியது AIBSNLEA மதுரை மாவட்ட சங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. புதிய பதிவை அதாவது, குடும்பத்துடன் பங்கேற்பு என்ற புதிய அத்தியாயத்தை AIBSNLEA மதுரை மாவட்ட சங்கம் படைத்துவிட்டது....
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தபால்-தந்தி, டெலிகாம், BSNL வளர்ச்சிக்கான இலாகா பனி மட்டுமல்ல, தொழிற்சங்கத்தில், சமுதாய பணியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட அருமைத் தோழன் என். வீரபாண்டியன், AIBSNLEA முன்னாள் மாநிலச் செயலருக்கு பனி நிறைவு பாராட்டு விழாவும் . . .
"பாலு"என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இளைய தோழன் ஜே. பாலசுப்ரமணியன்
பெற்ற BSNL இலாகா விருதை பாராட்டியும் ஒரு அற்புதமான குடும்ப, BSNLகுடும்ப விழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் மிக, மிக சீரும்,சிறப்புமாக AIBSNLEA மதுரை மாவட்ட சங்கம் நடத்தி முடித்துள்ளது.
பாராட்டு விழாவை மிக நேர்த்தியாக வழிநடத்திய நமது தோழன், வி.கே.பரமசிவம், மிக வித்தியாசமாக வரவேற்புரை நிகழ்த்திய AIBSNLEA மதுரை மாவட்ட செயலர் தோழர்.என். சீனிவாசன், நன்றியுரை வழங்கிய இளைஞர் சரத். ஓடி ஓடி பணி செய்திட்ட சண்முகவேல், செந்தில், சிவகுமார் உள்ளிட்ட அந்த பெரும் படையினர் அனைவரையும் பாராட்டுகிறோம்.
நிகழ்ச்சியில் நமது BSNLEU மதுரை மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் உட்பட ஒரு நீண்ட நெடிய வாழ்த்துரை, பாராட்டுரை, கௌரவித்தல், உரைவீச்சு என இரவு அதிக நேரம் ஆனாலும் நமது பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம் அவர்கள் இறுதிவரை இருந்தது மிக பாராட்டுக்குரிய விஷயமாகும்.
AIBSNLEA தமிழ் மாநில செயலர் தோழர்.சிவகுமார், AIBSNLEA தமிழ் மாநில பொருளர் தோழர். வெங்கடேசன், சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர்.உதய சூரியன், மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் தோழர்.எஸ். கருப்பையா, நமது மதுரை மாட்ட பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம் அவர்கள் ஆகியோரின் சிறப்புரைக்குப்பின், பாராட்டுப்பெற்ற தோழர்கள் ஜே. பால சுப்பிரமணியன், தோழர்.என். வீரபாண்டியன் இருவரின் ஏற்புரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழியர் கமலா வீரபாண்டியன் அவர்களுக்கு, தோழியர்.என். ஈஸ்வரி அவர்களும், தோழர்.ஜே. பால சுப்ரமணியன் அவர்களுக்கு தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் அவர்களும், தோழர். சிவகுமார் அவர்களுக்கு தோழர். எஸ். மாயாண்டி அவர்களும், தோழர்கள் என். வீரபாண்டியன் & உதய சூரியன் இருவருக்கும் தோழர், எஸ். சூரியன் பொன்னாடை போர்த்தி கௌவுரவ படுத்தினர்.
1 comment:
படித்து மகிழ்ந்தேன் ஐயா
நன்றி
Post a Comment