Monday, 12 January 2015

கோட்சேவை புனிதப்படுத்த வேண்டாம் உயர்நீதிமன்ற நீதிபதி...

காந்தியை சுட்டுக்கொன்ற கொடியவன் கோட்சேவை புனிதப்படுத்த வேண்டாம்என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கண்ட னம் தெரிவித்துள்ளார்.மதுரை சோக்கோ அறக்கட் டளையில் வெள்ளியன்று பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன கருத்தரங்கு நடந்தது. இதில்வழக்கறிஞர் ரத்தினம் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் கலந்து கொண்டுகாந்தி யடிகளை கொன்ற கோட்சே யை புனிதமாக்குவதா? என்றதலைப்பில் பேசினார். அப் போது அவர் கூறியதாவது:-அரசியலமைப்பு சட்டத் தை நம்புகிறவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தயக் கம் இருக்காது.எனவே உண்மை யின் அடிப்படையில் நான் கலந்து கொண்டேன். மதங் களின் மீதோ, கடவுள்களின் மீதோ எனக்கு பற்று கிடையாது. நான் இந்து பெற்றோருக்கு பிறந்தவன். எனது குடும்பத் தினரும், நண்பர்களில் பலரும்மதநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். வள்ளலார் ஆன்மிகவாதி. அவரை பெரி யார் போற்றினார்.விவேகானந்தர், திரு.வி.., நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்றவர்களும் மதநம்பிக்கை கொண்டவர்கள்தான். மத நம்பிக்கை இருக்கலாம். வள்ளலார் தனது பாடலில், ‘மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்என்றார். மதப் பேய் என்ற மதவாதம் கூடாது. கோட்சே, மதப்பேய் பிடித்தவன். அனைத்து தரப்பு மக்களாலும், மகாத்மா என ஏற்றுக்கொள்ளப்பட்டவர் காந்தி. அவரை பிர்லா பிரார்த்தனை மையத்தில் 30.1.1948 அன்று நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றான். காந்திகொலை வழக்கில் அவனுக்காக வாதாட எவரும் முன்வர வில்லை. அந்த கொலைவழக்கில் கோட்சேக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தான். மகாத்மாவை கொன்றவனையே 18 ஆண்டு களுக்கு பின் விடுதலை செய் தனர். அவனிடம் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, ‘அவர் இந்து மதத்துக்கு துரோகம் செய்தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
அதனால் கொன்றேன்என்றான். மதப்பேய் பிடித்ததால்தான் அவன் காந்தியை கொலை செய்திருக்கிறான்.கொலைகாரனை புனிதமாக்குவதை எவரும் விரும்பமாட்டார்கள். அவன்பாவியல்லவா? அப்படிப் பட்டவனுக்கு இந்தியா முழுவதும்சிலை வைப்போம்என்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவர்களை புனிதப்படுத்தாதீர்கள். பகவத் கீதையையோ, பைபிளையோ, குர்ஆனையோ பாடப்புத்தக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறுவது மதவாதம். ஆனால் அவற்றில் உள்ள அறநெறிக்கதைகளை பாடமாக்குங்கள் என்றால் அதை அனுமதிக்கலாம்.இஸ்லாமியவாதம், கிறிஸ்தவ மதவாதம் என்றெல் லாம் கூறுகிறார்கள். இந்துத் துவாவை மட்டும் இந்து மத வாதம் என கூறாமல், இந்திய தேசியவாதம் என்கிறார்கள். இதனையெல்லாம் அரசிய லமைப்பு சட்டத்தை நேசிப்பவர்கள் எதிர்க்க வேண் டும். விவேகானந்தர் கடைசிவரை இந்துத்துவா என்ற வார்த்தையை உபயோகிக்கவே இல்லை.
ஒரு பொதுக் கூட்டத்தில், பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் பேசியுள்ளார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு அர சியல்வாதி பேசலாம். நீதியரசர் பேசலாமா. அவருடைய இந்த கருத்தை தனது தீர்ப்பில் கூறியிருந்தால் கூட நான் இங்கே சொல்லியிருக்க மாட்டேன். பொதுக்கூட்டத்தில் பேசிய தால் கூறுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: