மறக்க முடியாத வரலாறுகள்ஆசிரியர்கள்:
கு.கலைச்செல்வன் டாக்டர் லட்சுமி விஸ்வநாதன் அனுராதா ரமணன்வெளியீடு: யுரேகா புக்ஸ்30/45, பைகிராப்ட்ஸ் சாலை, முதல் தெருராயப்பேட்டை,
சென்னை - 600 086பக்: 64, விலை ரூ. 40 /-
உலகில் யாரும் சாதிக்காததை, யாராலும் முடியாததை முடித்தவர்கள் இவர்கள்தான் என்றுவரலாறுகளில் இடம் பிடிக்கின்றனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின், சேகுவரா, காந்தி, பகத்சிங் இப்படிபலர் வரலாறுகளில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அழிந்தாலும் அவர்கள் உலகிற்கு செய்த மாற்றங்கள் காலந்தோறும் தொடர்ந்து தெரிந்துகொள்ள முடிகிறது.இப்படி ‘மறக்கவே முடியாத வரலாறுகள்’ என்ற நூலில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த நான்குபேரின் வாழ்க்கை கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதவகையில் கொடுக்கப் பட்டுள்ளது.பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் ஐசக் நியூட்டன், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேலுநாச்சியார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த லூயிப் ரெயில், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோஸா லக்ஸம்பர்க் ஆகிய நால்வரைப் பற்றி இந்நூல் சொல்லுகிறது. ஒவ்வொருவரைப் பற்றியும்தனித் தனி ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் தமது சமகாலச் சூழலில் பட்ட இன்னல்களை தன்படிப்பினையாக ஏற்று பின் மிகப்பெரிய சமூகப் போராட்டங்களாலும், அரிய கண்டுபிடிப்புகளாலும் உலகம் போற்றும் மாமனிதர்களாக மாறியுள்ளனர் என்பதை நூல் சுவையாக க்கூறுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கற்க வேண்டிய நூல் இது.
1 comment:
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
நன்றி ஐயா
Post a Comment