இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவின் தோல்வி இறுதியாகி விட்டதால், அதனை ஏற்று அரசின் அதிகாரப்பூர்வ மாளிகையில் இருந்து அவர் வெளியேறி உள்ளார். மக்களின் தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்துள்ள அவர், இலங்கையில் சுமூகமான அதிகார பகிர்வு நடைபெற தான் துணை நிர்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி வேட்பாளராக ஸ்ரீசேனா களமிறங்கினார். , இலங்கை அதிபர் தேர்தல், மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இலங்கை தேர்தலில் 70 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர். குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடமேற்கு பகுதிகளில், ஓட்டுப்பதிவு பரபரப்பாக நடைபெற்றது. இங்குள்ள புத்தாலம் கிராமத்தில், மொத்தம் உள்ள, 1,200 வாக்காளர்களில், ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில், 800 பேர் ஓட்டளித்து உள்ளனர். ஒரு சில பகுதிகளில், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் வாயிலாக, மக்கள் மறக்காமல் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பதிவாயின.இதன் பின்னர் இரவு ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஸ்ரீசேனாவுக்கு ஆதரவாக 62,17,162 ஓட்டுக்கள்
பதிவாகியுள்ளது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக 57,68,090 ஓட்டுக்கள்
பதிவாகியுள்ளது.
வெளியேறிய ராஜபக்ஷே : அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்ட ராஜபக்ஷே, அதிபர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். மேலும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், சமூகமான அதிகாரப் பகிர்வுக்கு தான் துணைநிற்பதாகவும் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இதனால் சிறிசேனாவின் வெற்றி உறுதி ஆகி விட்டதால், அவர் இன்று மாலை இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 comment:
தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ வாழ்த்துவோம்
Post a Comment