Tuesday, 13 January 2015

தகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி: ரவிசங்கர் பிரசாத்...

தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியைப் பெற்று வருவதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். அமைதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கன்னியாகுமரியில் திங்கள்கிழமை நடைப்பயணம் தொடங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் தொலைத்தொடர்புத் துறையின் டிஜிட்டல் சேவை சென்றடைய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் டிஜிட்டல் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தைப் பொருத்தவரை பிஎஸ்என்எல் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் டிஜிட்டல் சேவை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கால் சென்டர்கள் நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த நிலை மாறி, கிராமங்களை ஒட்டியுள்ள நகரப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்தியா முழுவதும் -காமர்ஸ் திட்டங்கள் மூலம் அஞ்சல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்... தினமணி 

No comments: