அருமைத் தோழர்களே ! எதிர் வரும் பிப்ரவரி மாதம் 01.02.2015 அன்று இன்சுரன்ஸ் ஊழியர்கள் சங்கம் AIIEA அமைப்பின் உழைக்கும் பெண்களின் தமிழ் மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. 12.01.2015 - அன்று மதுரை AIIEA சங்க அலுவலகத்தில் மாநில மாநாட்டிற்கான வரவேற்பு குழு கூட்டம் தோழியர் G. அருணா, அமைப்பாளர் தலைமையில் மிகவும் உற்சாகமாக நடை பெற்றது . . .இக் கூட்டத்தில் CITU, AIDWA, DYFI, AIIEA, BSNLEU, TNGEA, BEFI, NFISWI, MRGIEA, SFI, LIC-cl-1, TNSF, LICAOI, LIAFIஆகிய சங்கங்களில் இருந்து பங்கு பெற்றனர். அனைவரின் ஆலோசனைக்குப் பிறகு தோழியர்.ஜே. விஜயா, தென் மண்டல அமைப்பு மகளீர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைத் தலைவர் ஒரு மனதாக கீழ்கண்ட வரவேற்புக் குழுவை முன்மொழிந்தார். தலைவர் தோழர் எம். செல்லம், செயலர் தோழர் ஜி. அருணா, பொருளர் தோழர் டி. சித்ரா, மற்றும் 11 துணைத் தலைவர்கள், 11 இணைச் செயலர்கள் கொண்ட வரவேற்பு அமைக்கப்பட்டது. இம் மாநாட்டு அரங்கிற்கு மதுரை மண்ணில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீராங்கனை தோழர். கே.ஜானகியம்மாள் அவர்களின் பெயர் சூட்டப்படும். இடதுசாரி பெண் தலைவர்களில், இன்றும் நம்மோடு வாழ்த்து கொண்டிருக்கும் மூத்த தோழர் நாகம்மாள் அவர்கள் கவுரவிக்கப்பட உள்ளார். இம் மாநாட்டிற்கு உயர்திரு.நிர்மலா ராணி, உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அவர்களும், தோழர்.கே. சாமிநாதன், AIIEAதென்மண்டல பொதுச் செயலர் அவர்களும் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
AIIEA மூத்த தோழர். திண்டுக்கல் நாராயணன், முன்னாள் அகில இந்திய இணைச் செயலர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு சேர்க்கின்றார். மாநாட்டில் கலைக்குழு நிகழ்ச்சியும் நடை பெறும். நடைபெற்ற வரவேற்பு குழு கூட்டத்தில் நமது BSNLEU சார்பாக, மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனும், பொது மேலாளர் அலுவலக செயலர் தோழியர் என். ஈஸ்வரியும் கலந்து கொண்டனர். மாநாட்டு வரவேற்பு குழுவில் நமது BSNLEU சார்பாக தோழியர் என். ஈஸ்வரியும், ஜி. சரோஜினியும் இணைக்கப்பட்டுள்ளனர்.




No comments:
Post a Comment