Monday, 12 January 2015

சனவரி 12–விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (12.01.1863)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய், உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் 
ஆவாய்! உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும். பலமே வாழ்வு; 
பலவீனமே மரணம்!விழுமின்! எழுமின்!! கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்!!! 
'ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தான் நாட்டின் 
வளர்ச்சியும் அமைகிறது' என்ற விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதியை  தேசிய இளைஞர் தினமாக  கொண்டாடி வருகிறோம்.ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத 
நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பு மற்றும் மரியாதை போன்றவற்றைக் கொண்டிருந்தால் அந்த நாடும்
 முன்னேறும்' என்ற விவேகானந்தரின் வார்த்தைகளை உண்மையாக்கப்  பாடுபடுவோம் என அவர் பிறந்த நாளில்
 உறுதிமொழி ஏற்போம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

விவேகானந்தர் நினைவினைப் போற்றுவோம்