Sunday 31 July 2016

அன்புத் தோழர் P.V -க்கு. . .அன்பு வாழ்த்துக்கள் . . .

அருமைத் தோழர்களே ! கடலூர் மாவட்டத்தில் P.V என்று சொன்னால் அரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லமுடியும்... நமது அரங்கம் மட்டுமல்ல, மாறாக அனைத்து பகுதியிலும் அறிமுகமாகி பொது சேவைகளில், உதவி செய்வதில் எப்போதும் முன் நிற்க கூடிய அன்புத்தோழன் . . . அன்றைய கேசுவல் மஸ்தூர் முதற்கொண்டு, இன்றைய ஒப்பந்த ஊழியர் வரை அனைவரின் அன்பை பெற்ற அற்புதமான தோழர். P.V என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அருமைத்தோழர் P. வெங்கடேசன். ஒரு டெக்கினியசனாக இலாக்கா பணியை துவங்கி இன்று கோட்ட பொறியாளர் வரை அலுவலக பணியில் உயர்ந்துள்ள அருமைத்தோழர் P. வெங்கடேசன், தொழிற் சங்கத்தில் ஜனநாயகத்தை காக்க,K.G.போஸ்அணியை வளர்க்க தனது உயிரையும் பொறுப்படுத்தாது 
அராஜக வாதிகளிடம், அடிவாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்ற தோழர்.P.V ஆவார். தனது சீரிய பணி மூலமாக தொழிற் சங்கத்தில் படிப்படியாக உயர்ந்து, தற்போது AIBSNLEA தமிழ் மாநில சங்கத்தின் மாநில பொருளாராக இருந்து 31-07-16 அன்று இலாகாவில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரது பணி நிறைவு காலத்தில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். ... என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்.  D/S-BSNLEU.

3-8-16 மதியம் 1 மணிக்கு மதுரை G.M (O)ல் ஆர்ப்பாட்டம்...

அருமைத் தோழர்களே ! மத்திய BJP அரசு ஆட்சிக்கு வந்தவுடன், பிளானிங் கமிஷன் என்று பல ஆண்டுகளாக நடப்பில் இருத்த அமைப்பை கலைத்து விட்டு, உருவாக்கிய நித்தி ஆயோக் அமைப்பு  மோசமான பரிந்துரையான நமது  BSNL, MTNL நிறுவனங்களின் பங்குகளை "கேந்திர விற்பனை"  என்ற பெயரில் விற்பது, என்ற ஆலோசனையை அறிவித்துள்ளது. அதனை  எதிர்த்து, 03-08-2016 அன்று BSNL, MTNL சங்கங்கள் சார்பாக அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்ப ட்டுள்ளது

அதன்படி, நமது  மதுரை மாவட்டத்தில், 03.08.2016 அன்று 1 மணிக்கு, மதுரை G.M. அலுவலகத்தில் மதுரை மாவட்ட FORUM சார்பாக BSNLEU, SNEA, AIBSNLEA, BSNLOA ஆகிய சங்கங்கள் சார்பாக  ஆர்பாட்டம் நடைபெறும். 

மாவட்ட சங்க நிர்வாகிகள், அணைத்து கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள், மற்றும் அனைவரும் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்   திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். போராட்ட வாழ்த்துக்களுடன், என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்.

Friday 29 July 2016

ஜுலை 29 சர்வதேச புலி தினம் . . .

Image result for சர்வதேச புலிகள் தினம்வருடந்தோறும்  ஜூலை மாதம் 29ம் தேதி  சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த நூறாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையானது 97% வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வனவிலங்குகள் நிதியத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகிலுள்ள புலிகள் எண்ணிக்கை 3200 மட்டுமே ஆகும். புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி இனங்களே எஞ்சியுள்ளதாம். மேலும் 3 இனங்கள் அழிவடைந்துவிட்டதாம்.  மனிதச் செயற்பாடுகளின் காரணமாக குறிப்பாக வேட்டையாடுதல், வாழிடங்க ளினை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அருகிவருகின்ற விலங்கினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலி தினமானது கொண்டாடப்படுகின்றது.

CITU - பொதுச்செயலர் தபன்சென் கண்டனம் . . .


தங்கம் வென்ற மதுரை மாணவர் . . .

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான 4வது பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் மதுரை கூடல்நகர் பெத்சான் பள்ளி மாணவர் எஸ்.யுவன்சங்கர் டிஎஸ் பிரிவில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் பதக்கம் அணிவித்துப் பாராட்டினார். எஸ். யுவன்சங்கர் மென்மேலும் வளர நாம் வாழ்த்துகிறோம்.

03-08-2016 அன்று அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! நித்திஉத்யோக் அமைப்பின் பரிந்துரையான நமது  BSNL, MTNL கம்பேனிகளில் கேந்திர விற்பனை என்ற ஆலோசனையை எதிர்த்து 03-08-2016 அன்று BSNL, MTNL சங்கங்கள் அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளன.

கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார் . . .

தமிழ் நவீன கவிதையின் முன்னோடி களில் ஒருவரும் தனித்துவமான கவி மொழிக்குச் சொந்தகாரரும் ஆன கவிஞர்ஞானக்கூத்தன் சென்னை திரு வல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 78.ஞானக்கூத்தனின் இயற்பெயர் ஆர்.ரங்கநாதன். மயிலாடுதுறைக்கு அருகில்உள்ள திருஇந்தளூர் என்ற ஊரில் பிறந்துவளர்ந்தவர். பொதுபணித்துறையில் பணியாற்றிவர். தமிழ் மரபு இலக்கியத்திலும் சமஸ்கிருத இலக்கிய க்கியங்களிலும் நல்ல புலமை உடையவர். ம.பொ.சி யின் தமிழரசுக் கழகம் போன்ற அரசியல் இயக்கங்களில் பணியாற்றியவர். தமிழ்நாடு பெயர் வைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர். தமிழ் சிற்றிதழ் மரபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘கசடதபற’ இதழ் இவரின் முன் முயற்சியினால் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இளங்குயில், இளங்கம்பன் என்ற பல்வேறு புனைபெயர்களில் துவக்க காலத்தில் எழுதினார். திருமந்திரம் படித்தபிறகு அதன் தாக்கத்தில் தன்பெயரை ஞானக்கூத்தன் என்று மாற்றி க்கொண்டார். ‘அன்று வேறு கிழமை’, ‘சூரியனுக்குப் பின்பக்கம்’, ‘கடற்கரையில் சில மரங்கள்’, ‘மீண்டும் அவர்கள்’ போன்ற கவிதை நூல்களை எழுதியவர். பின்னர் இந்த கவிதைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு ‘பென்சில் படங்கள்’ என்ற தொகுப்பும் அதற்கு பிறகு எழுதப்பட்ட கவிதைகள், ‘என் உளம் நிற்றி நீ’ என்ற தொகுப்பாகவும் வெளிவந்துள்ளன. சாரல் விருது, விஷ்ணு புரம் அறக்கட்டளை விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது, ‘அன்று வேறு கிழமை’ கவிதை நூல், தமிழ் இலக்கிய சூழலில் பரவலான கவனத்தைப் பெற்ற தொகுப்பாகும். தமிழ் கவிதைகளில் மரபின் தொடர்ச்சியையும் நவீனத்தின் புதுமையையும் இணைத்த பெருமை ஞானக்கூத்த னுடையதாகும். அவரது கவிதைகளில் எள்ளல் நடை குறிப்பிடத்தக்கது.சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஞானக்கூத்தன் மகன் இல்லத்தில்வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இலாக்காத் தேர்வு எழதிய SC/ST தோழர்கள் மதிப்பெண்கள் மறுபரிசீலனை...

அருமைத் தோழர்களே ! இலாக்காத் தேர்வு எழதிய SC/ST தோழர்கள்  மதிப்பெண்கள் இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்த தோழர்களின்  தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும்,   SC/ST தோழர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைக் குறைக்கக்கோரியும் நமது BSNLEU சங்கம் வெகு நாட்களாக, தொடர்ந்து   குரல் எழுப்பி வந்தது.. இப்பிரச்சினைநாடாளுமன்றக்குழுவின்கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது தற்போது இப்பிரச்சினை தீர்விற்காக அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை அளித்ததின் அடிப்படையில் . . . .
 *  நமது BSNL நிர்வாகம்  இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெறSC/ST தோழர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைத் தளர்த்தி உத்திரவிட்டுள்ளது 
 * ஊழியர்கள் பதவிகளுக்கிடையேயான  TM,TTA மற்றும் UDC தேர்வுகளுக்கும்... ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் பதவிகளுக்கான JAO,JTO,PA மற்றும்  இந்தி அதிகாரி தேர்வுகளுக்கு இது பொருந்தும்
 *  02/12/2014க்குப்பின் அறிவிப்பு செய்யப்பட்ட தேர்வுகளுக்கு இந்த உத்திரவு பொருந்தும்.  
* இந்த உத்தரவின்படி JTO, JAO தேர்வுகளுக்கு 30 என்று நிர்ணயிக்கப்பட்ட கூட்டு மதிப்பெண் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்களின் பலன்களுக்கானCGM உத்தரவு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU+TNTCWU இரு சங்கங்களின் தொடர் முயற்சி மற்றும் போராட்ட அறிவிப்பை ஒட்டி நடைபெற்ற  பேச்சு வார்த்தையின் அடிப்படையில் மாநில நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களின் பலன்களுக்கான உத்தரவை வெளியிட்டுள்ளது....

வங்கி ஊழியர்கள் போராட்டம் வெற்றி BSNLEUபெற வாழ்த்துகிறது.


Thursday 28 July 2016

கல்விக்கு கொடுப்பது கடன் அல்ல . . .


லெனின் மரணத்துக்கு யார் பொறுப்பு ? . . .

ரிலையன்ஸ் நிறுவனமே பல வங்கிகளுக்கு ரூ.1,25,000கோடி கடன் பாக்கி வைத்திருக்கும்போது, அந்நிறுவனத்திடம்இந்தக் கடனை வசூல் செய்யும் வேலையை ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை வங்கி எப்படிக் கொடுக்க முடியும். . .

27-07-16 சிறப்புடன் நடை பெற்ற திருமங்கலம் மாநாடு...

அருமைத் தோழர்களே !  நமது திருமங்கலம் கிளையின் மாநாடு  27-07-16  அன்று மாலை தொலைபேசியகத்தில் , தோழர் நாகராஜ் தலைமையில் மிகவும் சிறப்புடன் நடை பெற்றது நமது சங்க கொடியை  கிளைத்தலைவர் தோழர் நாகராஜ் ஏற்றிவைத்தார். மாநாட்டில் அஞ்சலியுரையை தோழர் அஜ்மல் கான் நிகழ்த்தினார். வரவேற்புரையை கிளை செயலர் தோழர். சுப்புராஜ் நிகழ்த்தினார். . .
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர் .எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். அதன்பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. நிர்வாகிகள் தேர்வில் தலைவர், செயலர், பொருளர் முறையே, தோழர்கள் நாகராஜ், கண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். . . 
தோழர்கள், நெடுஞ்செழியன், நாராயணன் , பிச்சைக்கண்ணு, சின்னையன், வீரபத்திரன் மற்றும் SNEA மாநில உதவிச் செயலர் தோழர். அழகர்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள். சி. செல்வின் சத்தியராஜ், பி . சந்திரசேகர்  ஆகிய இருவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் அஜ்மல் கான் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

28-07-16 மதுரை GM(O)ல் பணி நிறைவு பாராட்டு விழா.

அருமைத் தோழர்களே ! நமது மதுரை SSA-யில் இம் மாதம் ஜூலை பனி நிறைவு  செய்யும் தோழர்களுக்காண பணி நிறைவு பாராட்டு விழா 28-07-16 காலை 11 மணிக்கு மதுரை GM(O) -TRCயில்  பொது மேலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது  .  .  . 
பணி நிறைவு செய்யும் தோழர்கள் 
1.  தோழர் . ஜூலியஸ் , திருநகர் 
2.  தோழர்  . மாயிருளன் , G.M (O)
3.  தோழர்  . முருகன் , TKM
4.  தோழர்  . பொன்னையா , தேனி 
5.  தோழர்  . சேகர் , KSV
6.  தோழர்  . ஷேக் இப்ராஹிம் , EMM
7.  தோழர்  . சுந்தரம் , அழகப்ப நகர் 
அனைவரின் பணி ஓய்வு காலம் 
சிறக்க நமது உளப்பூர்வமான 
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....என்றும் தோழமையுடன், S. சூரியன், D/S-BSNLEU.

Wednesday 27 July 2016

27-07-16 நடக்க . . . . . இருப்பவை . . . . .


Dr. அப்துல் கலாம் அவர்களின் முதலாண்டு நினைவு தினம்.


ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை...

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகுறித்து  நமது தமிழ் மாநில சங்கம் , போராட்ட  அறைகூவலுக்கு கிடைத்திட்ட வெற்றி - சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. .... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.


Tuesday 26 July 2016

25-07-16 திருப்திகரமான திருநகர் கிளை மாநாடு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU திருநகர் கிளையின் மாநாடு தோழர் .T. டேனியல் ராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நமது சங்க கொடியை தோழர். A.சுந்தரராஜன் ஏற்றிவைத்தார். அஞ்சலி உரையை தோழர்.A.A. ஜூலியஸ் நிகழ்த்தினார். வரவேற்புரையை தோழர் V. நாராயணன் நிகழ்த்தினார்....
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர்.S. சூரியன் உரை நிகழ்த்தினார். அதன் பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் T. டேனியல் ராஜ்,  V. நாராயணன்,  K. பாலகுரு ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, இம்மாதம் பனி  பெரும் தோழர்.A.A. ஜூலியஸ் அவர்களுக்கு பணிநிறைவு விழா நடைபெற்றது. வாழ்த்துரையாக ,BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், N.செல்வம், R.சண்முகவேல், TNTCWU மாவட்ட தலைவர். தோழர் .k.வீரபத்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக கிளை பொருளர் தோழர். K. பாலகுரு நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது....என்றும் தோழமையுடன், S. சூரியன், D/S-BSNLEU.

ஜூலை - 26, கார்க்கில் நினைவு தினம் . . .

Image result for கார்கில் நினைவு தினம்Image result for கார்கில் நினைவு தினம்

Monday 25 July 2016

24-07-16 நடந்தவை . . .

அலங்காநல்லூர் கல்குவாரி விபத்து குறித்து ஆய்வறிக்கை வெளியிடுகசிஐடியு மதுரை புறநகர் மாநாடு வலியுறுத்தல்
சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட 8-வது மாநாடு ஞாயிறன்று எஸ்.ஆலங்குளத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன் தலைமை வகித்தார். மாநாட்டுக் கொடியை மெப்கோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.தவுடன் ஏற்றிவைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம்.பாண்டி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் பி.ஜீவானந்தம் வரவேற்றுப்பேசினார்.
மாநிலச் செயலாளர் டி..லதா துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பொன்.கிருஷ்ணன் வேலையறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வி.பிச்சைராஜன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கே.ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினார்.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.அரவிந்தன், மாவட்டச் செயலாளராக பொன்.கிருஷ்ணன், பொருளாளராக பி.முத்துராஜா, துணை தலைவர்களாக வி.பிச்சைராஜன், ஜி.பாண்டிச்செல்வி, .அய்யணப் பிள்ளை, என்.காளிராஜன், எம்.அறிவு, துணைச் செயலாளர்களாக ஜி.கௌரி,பி.பொன்ராஜ், எஸ்.எம்.பாண்டி, சி.கண்ணன், கே.தங்கவேல்பாண் யன், பாண்டீஸ்வரன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் கே.செல்லப்பன் நிறைவுரையாற்றினார். வரவேற்புக் குழு செயலாளர் செ.ஆஞ்சி நன்றி கூறினார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டியில் உள்ள கல் குவாரியில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். இச்சம்பவத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மதுரை மாவட்டஆட்சியர் மற்றும் கனிமவள அதிகாரிகள் இதுபற்றி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும். மதுரை மாவட்டத்தில் கல்குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகள், கருவிகளை வழங்க வேண்டும்.அத்தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் முறையில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். கொண்டையம்பட்டி கல்குவாரி விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களான நல்லையன், முத்துராமலிங்கம், செந்தில் ஆகியோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு, குழந்தைகளின் கல்விச் செலவுகளை தமிழக அரசே ஏற்க வேண்டும்.எஸ்.பி..வங்கியில் கல்விக்கடன் வாங்கிய மதுரை, அனுப்பானடியை சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் மகன் கே.லெனின் என்ற மாணவர் ரிலையன்ஸ் நிறுவனத்தினரின் மிரட்டலால் மனமுடைந்து தற்கொலைசெய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மத்திய அரசு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசும்,மத்திய அரசும் உரிய முறையில் தலையிட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதிய மறுநிர்ணயக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த, அரசாணை வெளியிட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க, பெண்கள் வேலை செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் புகார் குழுக்கள் மற்றும்புகார்பெட்டிகள் நிறுவ வேண்டும். அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் புகார் குழுக்கள்மற்றும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். பெண்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.தமிழக அரசு, மணல், சிமெண்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி கட்டுமான தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மாவட்டத்தில் குவாரி, கிரானைட் உள்ளிட்ட கனிமவள தொழில்களை முறைப்படுத்தி, டாமின் குவாரிகளை திறந்தும், கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு அறிவித்தபடி அமைச்சர் உறுதி அளித்தபடி மேலூர் கூட்டுறவு நூற்பு ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.செப்டம்பர் 2 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.