அருமைத் தோழர்களே ! 13-07-16 அன்று மாலை மதுரை லெவல்-4 வளாகத்தில் SDOT கிளையின் நமது BSNLEU மாநாடு...மிக மிக எழுச்சியுடன் கிளைத்தலைவர் தோழர் .S.பகவத் சிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சலியுறையை தோழர் பாலச்சந்திரன் நிகழ்த்த, தோழர். நெடுஞ்செழியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டினை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். அதன் பின் மாநாட்டின் ஆண்டறிக்கையை கிளை செயலர் தோழர். முருகேஷ் பாபு சமர்ப்பித்தார். வரவு-செலவு கணக்கை தோழர்.பெருமாள் சமர்ப்பித்தார். மாநாட்டில் ஆண்டறிக்கை, வரவு செலவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தலைவர், செயலர் , பொருளர் முறையே தோழர்கள், .S.பகவத் சிங்கம், முருகேஷ் பாபு ,K.R. ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 13-08-16 அன்று நடைபெற உள்ள மதுரை மாவட்ட மாநாட்டிற்கான சார்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சுப்புராயலு , மானுவேல் பால்ராஜ், செல்வம், மாயாண்டி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் என். சோணை முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார். அதன்பின் மாநில உதவிச் செயலர் தோழர். செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார், இறுதியாக தோழர் பெருமாள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.புதிய நிர்வாகிகள் சிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.என்றும் தோழமையுடன், ..எஸ். சூரியன்---D/S-BSNLEU.
No comments:
Post a Comment