வருடந்தோறும் ஜூலை மாதம் 29ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த நூறாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையானது 97% வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வனவிலங்குகள் நிதியத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகிலுள்ள புலிகள் எண்ணிக்கை 3200 மட்டுமே ஆகும். புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி இனங்களே எஞ்சியுள்ளதாம். மேலும் 3 இனங்கள் அழிவடைந்துவிட்டதாம். மனிதச் செயற்பாடுகளின் காரணமாக குறிப்பாக வேட்டையாடுதல், வாழிடங்க ளினை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அருகிவருகின்ற விலங்கினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலி தினமானது கொண்டாடப்படுகின்றது.
No comments:
Post a Comment