தமிழ் நவீன கவிதையின் முன்னோடி களில் ஒருவரும் தனித்துவமான கவி மொழிக்குச் சொந்தகாரரும் ஆன கவிஞர்ஞானக்கூத்தன் சென்னை திரு வல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 78.ஞானக்கூத்தனின் இயற்பெயர் ஆர்.ரங்கநாதன். மயிலாடுதுறைக்கு அருகில்உள்ள திருஇந்தளூர் என்ற ஊரில் பிறந்துவளர்ந்தவர். பொதுபணித்துறையில் பணியாற்றிவர். தமிழ் மரபு இலக்கியத்திலும் சமஸ்கிருத இலக்கிய க்கியங்களிலும் நல்ல புலமை உடையவர். ம.பொ.சி யின் தமிழரசுக் கழகம் போன்ற அரசியல் இயக்கங்களில் பணியாற்றியவர். தமிழ்நாடு பெயர் வைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர். தமிழ் சிற்றிதழ் மரபில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘கசடதபற’ இதழ் இவரின் முன் முயற்சியினால் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இளங்குயில், இளங்கம்பன் என்ற பல்வேறு புனைபெயர்களில் துவக்க காலத்தில் எழுதினார். திருமந்திரம் படித்தபிறகு அதன் தாக்கத்தில் தன்பெயரை ஞானக்கூத்தன் என்று மாற்றி க்கொண்டார். ‘அன்று வேறு கிழமை’, ‘சூரியனுக்குப் பின்பக்கம்’, ‘கடற்கரையில் சில மரங்கள்’, ‘மீண்டும் அவர்கள்’ போன்ற கவிதை நூல்களை எழுதியவர். பின்னர் இந்த கவிதைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு ‘பென்சில் படங்கள்’ என்ற தொகுப்பும் அதற்கு பிறகு எழுதப்பட்ட கவிதைகள், ‘என் உளம் நிற்றி நீ’ என்ற தொகுப்பாகவும் வெளிவந்துள்ளன. சாரல் விருது, விஷ்ணு புரம் அறக்கட்டளை விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது, ‘அன்று வேறு கிழமை’ கவிதை நூல், தமிழ் இலக்கிய சூழலில் பரவலான கவனத்தைப் பெற்ற தொகுப்பாகும். தமிழ் கவிதைகளில் மரபின் தொடர்ச்சியையும் நவீனத்தின் புதுமையையும் இணைத்த பெருமை ஞானக்கூத்த னுடையதாகும். அவரது கவிதைகளில் எள்ளல் நடை குறிப்பிடத்தக்கது.சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஞானக்கூத்தன் மகன் இல்லத்தில்வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment