Wednesday, 13 July 2016

12-07-16 எழிலுடன் நடைபெற்ற பழனி கிளை மாநாடு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU  பழனி கிளையின்  மாநாடு 12-07-16 அன்று CSC-யில் தோழர்.அன்பழகன்தலைமையில்வண்ணமையத்துடன்நடைபெற்றது. தோழர் சந்திரசேகர் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் சாது சிலுவை மணி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் மாநாட்டை துவக்கிவைத்து உரை நிகழ்த்தினார். தோழர். பழனிக்குமார் ஆண்டறிக்கை சம்பித்தார் , ஆண்டறிக்கை  வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.  அதன்பின் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தலைவர், செயலர், பொருளர்  முறையே  தோழர்கள் சாது சிலுவைமணி, அன்பழகன், செந்தில் ஆகியோர்  உட்பட 15 நிர்வாகிகள்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்....
வாழ்த்துரையாக மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள்,A.  சிவப்பிரகாசம்,P. கணேசன், A.வைத்திலிங்கபூபதி, AIIEA ராஜேந்திரன், SEWA  துரைசாமி, கிளைச்செயலர்கள், K.S.ஆரோக்கியம், P. சுருளிஆண்டவர் ஆகியோர் பேசினர். மாநில சங்க நிவாகிகள் தோழர்கள் C.. செல்வின் சத்தியராஜ், S. ஜான் போர்ஜியா  ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார். புதிய நிர்வாகிகள் பணி சிறக்க நமது மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.... என்றும் தோழமையுடன், S.. சூரியன், D/S-BSNLEU.

No comments: