அருமைத் தோழர்களே ! 18-07-16 திங்கள் மாலை மதுரை தெற்கு கிளையின் மாநாடு , கிளைத்த தலைவர் தோழர்.T. சுப்புராஜ் தலைமையில் மிகவும் செவ்வனே நடைபெற்றது. மாட்டில் அஞ்சலி உரையை தோழர்.K.N. செல்வன் நிகழ்த்தினார். கிளை செயலர் தோழர். S. சலீம் பாட்சா வரவேற்புரையை நிகழ்த்தினார்.
மாநாட்டை துவக்கிவைத்து மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதன் பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. வரும் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள். K.N. செல்வன், S.சலீம் பாட்சா, G.R. தினகரன் ஆகியோர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
வாழ்த்துரையாக BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், V. சுப்புராயலு, N. செல்வம், R. சண்முகவேல், S. மானுவேல் பால்ராஜ், A. நெடுஞ்செழியன் , TNTCWU -D/S தோழர் என். சோணை முத்து ஆகியோர் உரையாற்றினர். தோழர்.சி .செல்வின் சத்தியராஜ், ACS சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக தினகரன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment