அருமைத் தோழர்களே ! ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 78.2 சத உத்திரவு 18/07/2016 DOTயால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி...10/06/2013க்கு
முன்பாக ஓய்வு பெற்ற தோழர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 01/01/2007 முதல் திருத்தி அமைக்கப்படும்.
10/06/2013 முதல் நிலுவை வழங்கப்படும். முழு ஓய்வூதியம் (INCLUDING COMMUTATION) மற்றும் குடும்ப ஓய்வூதியத்துடன் 78.2 சத IDA இணைப்பு சேர்க்கப்படும். அதில் 30 சதம் கூடுதல் ஓய்வூதியமாக சேர்க்கப்பட்டு நிர்யணம் செய்யப்படும். பணிக்கொடை, விடுப்புச்சம்பளம் மற்றும் தொகுப்பு ஓய்வூதியம் (COMMUTATION ) ஆகியவற்றில் மாற்றமில்லை. BSNL நிர்வாக அலுவலகங்கள் உரிய கணக்கீடு செய்து DOTCELLக்கு அனுப்பிட வேண்டும். மேற்கண்ட ஓய்வூதியத் திருத்தம் 31/12/2016க்குள் முடிக்கப்பட வேண்டும். விரைந்து செயலாற்றி மத்திய அமைச்சரவை முடிவை உத்திரவாக்கிய நமது மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள். உத்தரவு காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment