அருமைத் தோழர்களே ! கடந்த 23-07-16 அன்று மாலை வேடச்செந்தூர் தொலைபேசி நிலையத்தில் நமது BSNLEU கிளை சங்கத்தின் கிளைமாநாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றது. சிறிய கிளை என்றாலும் . . . பெரிய அளவில் செயல்பாடு...இருக்கின்றது என்பதை நமது மதுரை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது....கொடியேற்றம், SDEபங்கேற்பு, NFTE நிர்வாகி பங்கேற்பு, ஆண்டறிக்கை, அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பு, சிறப்பான சிறுண்டி இப்படி அனைத்து வகையிலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப, BSNLEU கிளைச் சங்கம் சிறிதாக இருந்தாலும், அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நிலைநிறுத்திய நமது வேடச்செந்தூர் கிளை செயலர் தோழர்.எம் சௌந்தரராஜன் அவர்களை உளப்பூர்வமாக பாராட்டுகிறோம்...
கிளைமாநாட்டிற்கு தோழர்.முருகேசன் தலைமை ஏற்று நடத்தினார். நமது சங்க கொடியை தோழியர்.நேவிஸ் ஏற்றிவைத்தார். மாநாட்டில் அஞ்சலி உரையை தோழர். அண்ணாதுரை நிகழ்த்தினார். வரவேற்புரையை கிளை செயலர் தோழர்.சௌந்தராஜன் நிகழ்த்தினார்.
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். அதன் பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்கப்பட்டது. மாநாட்டை வாழ்த்தி, வேடசந்தூர் SDE திரு. ராமசாமி அவர்கள், NFTE கிளை செயலர் தோழர். மருதப்பா, மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், வைத்திலிங்க பூபதி, சுமதி, திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் கிளை செயலர்கள் தோழர்கள் கே. எஸ். ஆரோக்கியம், எ. குருசாமி , மற்றும் பொருளர் தோழர். பாக்யராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள். சி. செல்வின் சத்தியராஜ், எஸ். ஜான் போர்ஜியா ஆகிய இருவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தோழர் எம். அண்ணாதுரை நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment