கங்கை கரையில் மக்கள் கூடும் இடத்தில் பொருத்தமான முறையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், பாஜக எம்.பி., தருண் விஜய் திருக்குறள் உலகப் பொதுமறை என்றும், திருவள்ளுவர் உலகிற்கே சொந்தமானவர் என்றும் தமிழகத்திற்கு வந்து கூறுகிறார். ஆனால் ஹரித்துவாரில் வள்ளுவர் சிலையை நிறுவ இந்துத்துவாவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வள்ளுவர் சிலை தற்போது பிளாஸ்டிக் காகிதத்தால் கட்டப்பட்டு கீழே கிடக்கிறது. திருவள்ளுவரின் பெருமையை தருண் விஜய் முதலில் அவரது கட்சியினருக்கும், எதிர்ப்பு தெரிவிக்கும் மதவெறியர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கபட நாடகம் அம்பலமாகிவிட்டது. வள்ளுவரின் சிலையை கங்கை கரையில் மக்கள் கூடும் பொருத்தமான இடத்தில்நிறுவ வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையைஉத்தரகாண்ட் மாநில அரசு எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment