Thursday 31 March 2016

01-04-2016 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே! நமது மத்திய சங்க அறைகூவலுக்கு இணங்க 
01-04-2016 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் . . .
தொழிலாளி கை ஏந்தும் பிச்சைக்காரன் அல்ல
நமது பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு PLI கமிட்டி உறுப்பினர். அவர் நேற்று 30-03-2016 அன்று அகமதாபாதிற்கு தேர்தல் பிரச்சாரம் சென்றிருந்தபோது PLI கமிட்டி கூட்டம் நேற்று மதியம் 3 மணிக்கு அதன் கன்வீனரால் கூட்டப்பட்டது. NFTE தலைவர் தோழர். இஸ்லாம் அகமது அதன் மற்றொரு உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்றார். நிர்வாகம் ரூ.10 முதல் ரூ.99 வரைதான் போனஸ் தர முடியும் என்று கூறியுள்ளதாகவும் அதனை இஸ்லாம் அகமது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. NFTE CHQ இணையதளத்திலும் மிகக் குறைவான போனஸ் தர நிர்வாகம் முன் வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு மேனேஜ்மெண்ட் கமிட்டிக்கு செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதான் NFTEயின் செயல்பாடு..எங்கும் எதிலும்LOW-QUOTATION. 
நம் பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு இந்த முடிவை ஏற்க முடியாது என்றும், இதனை எதிர்த்து BSNLEU போராடும் என்றும் CMDயிடம் கூறியுள்ளார். எனவே குறைந்த போனஸ் கேட்டு நாளை 01-04-2016 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. மேலும் 07-04-2016 அனறு ஒரு நாள் தார்ணா போராட்டம் நடத்தவும் அறைகூவல் விடப்பட்டுள்ளது. அணிதிரள்வோம் போராடுவோம்.   NFTE-நிர்வாகத்தின் கூட்டு சதியை முறியடிப்போம்... 
LOW-QUOTAION,NFTE
10-05-2016அன்றுதோற்கடித்து தொழிலாளிக்காக போராடும் BSNLEUவை வெற்றி பெறச் செய்வோம். 01-04-16 அன்று மதுரை G.M.அலுவலகத்தில் மதியம் ஒரு மணிக்கு நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

Wednesday 30 March 2016

நமது இதயத்திற்கு நெகிழ்வான ஒரு நிகழ்வு . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU சங்கத்தின் அடையாளம் இதுதான் என்ற மன நிறைவோடு நடைபெற்ற  இதயத்திற்கு நெகிழ்வான ஒரு நிகழ்வு . . .என்ன வென்றால். ஒட்டன்சத்திரத்தில் பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர் கடந்த முந்தைய மாதம் மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டார்  என்ற செய்தி,  அந்த குடும்பத்தையும் நம்மையும் மிக அதிர்சிக்கு உள்ளாக்கியது. நமது BSNLEU+TNTCWU இரு மாவட்ட சங்கங்களின் சார்பாக குடும்ப நிவார்ண நிதியை  திட்டமிட்டோம்.  குறுகிய காலத்தில் நமது அனைத்து கிளைச் சங்கங்களும் களப்பணியாற்றி 28.03.2016 விரிவடைந்த செயற்குழுவில் நிதி வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். நிதி 95,000 திரண்டுஇருந்தது, இதை கண்ணுற்ற தோழர்.S. செல்லப்பா AGS  அவர்கள் மாநில சங்கம் சார்பாக ரூபாய் 5000 சேர்த்து ஒரு லட்சமாக மறைந்த தோழர் கே.லெட்சுமணன் மனைவியிடம் நிதி அளிக்கப்பட நிகழ்வு , பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலனில் நமது சங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை பறை சாற்றியது.

Tuesday 29 March 2016

31-03-16 பணி நிறைவு பாராட்டு விழா . . .

அருமைத் தோழர்களே ! 31-03-16 அன்று  பணி நிறைவு பாராட்டு விழா நமது பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட தோழர்கள் இம்மாதம் பணி நிறைவு செய்கின்றார்கள். அனைத்து தோழர்களின் பனி நிறைவு காலம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழத்துக் களை தெரிவித்துக்கொள்கிறது...
  1. G.பாலுசாமி  TM-TKM
  2. S. தாவூத் பாட்சா  TM-EMM
  3. S. ஜெயராஜ்  STS-VLM
  4. P.கனகவேல்பாண்டியன் 
  5. L. ராதாகிருஷ்ணன்  STS-TEI
  6. R. ராஜன்  TM-EMM
  7. R. ராஜேந்திரன்  TM-MEL
  8. A. ரேணுகாதேவி STS-TKM
  9. N. சங்கிலி RM-EMM 
  10. R. செல்வம் SSS-TEI
  11. L. செல்வராஜன்  STS-GM(O)
  12. P. சுப்ரமணியன் TM-EMM 
  13. P. சுப்புராஜ்  THS-ALPN
  14. G. சுந்தரராஜ்  TM-GM(O)
  15. N. உத்தரகுமார் TM-EMM 

28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்சிகள்.2


28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்சிகள்.1


28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழுவின் சில காட்சிகள்.

Monday 28 March 2016

வெற்றிக்கு கட்டியம் கூறிய 28-03-15 விரிவடைந்த செயற்குழு....

அருமைத் தோழர்களே ! 10-05-2016 அன்று நடைபெற உள்ள 7வது  சங்க அங்கீகார தேர்தலில் தொடர்ந்து No. 1 சங்கமாக BSNLEU சங்கம், 51 சதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவினை  பெறும் என்பதில்  கிஞ்சிற்றும் ஐயம் இல்லை என்ற செய்தியை பறை சாற்றும் வண்ணம் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 28-03-15 விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரை வாடிக்கையாளர் சேவை மைய மணமகிழ் மன்றத்தில், BSNLEU   மாவட்டத்தலைவர் தோழர் சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில்,  தோழர்.எ. பாபு ராதாகிருஷ்ணன் , மாநிலச் செயலர்  துவக்க உரையுன், தோழர்.எஸ். செல்லப்பா அகில இந்திய உதவிச் செயலர் சிறப்புரையுடன் செயற்குழு  வெற்றிக்கு கட்டியம் கூறியது  ....
                                  செயற்குழுவில் அறிக்கையின் அறிமுக உரையோடு வந்திருந்த அனைவரையும் வரவேற்று  மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் பேசினார். அதன் பின் விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே  மறைந்த ஒட்டன்சத்திர ஒப்பந்த ஊழியர் தோழர். கே. இலட்சுமணன்   குடும்ப நிவாரண நிதியாக (தமிழ் மாநில சங்கத்தின் நிதி ரூபாய் 5 ஆயரத்தையும் சேர்த்து )ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டது .
 விவாதத்திற்கு பின், SNATTA மதுரை  மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர். சாத்தையா அவர்களும், தமிழ் மாநில  SNATTA மாநிலச் செயலர் தோழர்.P. அழகு பாண்டிய ராஜா BSNLEU மாநில சங்க அமைப்பு செயலர். பி . சந்திர சேகர், மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா  மற்றும் TNTCWU என். சோணைமுத்து,  ஆகியோரின் வாழ்த்துரைக்கு பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,  தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது,

Thursday 24 March 2016

28.03.2016 செயற்குழுவிற்கான சிறு விடுப்பு உத்தரவு


நமது BSNL + யூனியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் . . .

அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனம் + யூனியன் வங்கி இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ள்ளது கடந்த மூன்று மாதங்களாக முடிவுக்கு வராதயூனியன் வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்மீண்டும்    நமது BSNL உடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான தொடர் முயற்ச்சியை எடுத்த நமது BSNLEU மத்திய சங்கத்திற்கு நன்றி..BSNL - UNION BANK OF INDIA ஒப்பந்தம்  01/01/2016 முதல் 31/12/2016 வரை அமுலில் இருக்கும்.
* தனி நபர்க்கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.
* தனி நபர்க்கடன் வட்டி விகிதம் 12.15 சதம்.
* பெண்களுக்கு 0.25 சதம் வட்டியில் சலுகை.
* வங்கியில் கடன் பெற்ற ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது   குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள் வங்கியின் கடனைக் கட்டியபின்புதான் அனுப்பப்பட வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகளை யூனியன் வங்கி கூறியதால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. தற்போது அது போன்ற விதிமுறைகள் இல்லாமல் ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. ஆயினும் கடன் பெறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் இருக்கக் கூடாதென புதிய கட்டுப்பாட்டை யூனியன் வங்கி விதித்துள்ளது

Tuesday 22 March 2016

புதிய Gr.D நியமனம் மதுரைSSAயில் 13 பேர் -வாழ்த்துக்கள்...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை SSA யில் புதிதாக 13 Gr.D நியமனம் நடந்ததுள்ளது. அனைவரின் பணி சிறக்க நமது BSNLEU சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம். S.சூரியன்- D/S-BSNLEU.

23-03-16 நடக்க இருப்பவை . . .மாநில சங்க அறைகூவல். . .


Sunday 20 March 2016

கிளைச் செயலர்கள்உடனடி கவனத்திற்கு . . .



19-03-16 கம்பம் & பாளையம் தேர்தல் சிறப்பு கூட்டம்...

அருமைத் தோழர்களே ! கிளைகள் தோறும் கூட்டம் என்ற அடிப்படையில் கடந்த 19-03-16 அன்று நமது கம்பம் & பாளையம் கிளைகள் சார்பாக 7 வது   சங்க அங்கீகார தேர்தல் சிறப்பு கூட்டம்... தோழர் எஸ். ராஜன் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இரு கிளைகளிலும் இருந்து பெருவாரியான தோழர்கள் கூட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர். கிளைச் செயலர்கள் எ. அன்புராஜா, எம். பிச்சைமுத்து இருவரும் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய யுக்திகள்  குறித்து எடுத்துரைத்தனர்.

மாவட்ட சங்கத்தின் சார்பாக கலந்து கொண்ட தோழர் டி.கே. சீனிவாசன் தனது உரையில் மத்திய, மாநில, மாவட்ட சங்க முடிவுகளை விளக்கியதோடு தேர்தலில் நமது BSNLEU சங்கம் தொடர் வெற்றியை ஈட்டுவது உறுதியாக இருந்தாலும், அதிகபட்ச வாக்குகளை பெற்று  51 சதத்திற்கு மேல் வாக்குகள் பெறுவதற்கு அனைவரும் களப்பணி ஆற்ற வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இறுதியாக தோழர். ஆர். சுப்பிரமணியன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.வாழ்த்துக்களுடன், S.சூரியன் - D/S-BSNLEU.

விரிவடைந்த மாவட்ட செயற்குழு 28.03.16 போஸ்டர் . . .


28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு...


Friday 18 March 2016

அன்புடன் ஒரு அழைப்பு ... அவசியம் வாங்க ...


சங்கரய்யாவுக்கு காயிதே மில்லத் விருது . . .

விருதுத் தொகையை மாணவர்களுக்காக அளித்த சங்கரய்யா . . . ஏற்புரையாற்றிய சங்கரய்யா, “அரசு அளித்த விருதுகளையும் தியாகிகள் உதவித்தொகையையும் ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்த விருதை ஏற்கிறேன். ஆனால் விருதுத் தொகை இரண்டரை லட்சம் ரூபாயை, இக்கல்லூரியால் பயனடையும் தலித் மாணவர் களுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் தொடர்ந்து உதவிடு வதற்காக இந்த அறக்கட்டளையிடமே ஒப்படைக்கிறேன்,” என்று அறிவித்தார்.அரங்கம் நிறையக் கூடியிருந்த மாணவர்களும் பார்வையாளர்களும் உணர்ச்சிப் பெருக்குடன் எழுப்பிய கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது
 நாட்டின் அரசமைப்பு சாசனம் வலியுறுத்துகிற மதச்சார்பின்மைத் தத்துவத்தைப் பாதுகாக்க இளைய தலைமுறையினர் உறுதியேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அறைகூவல் விடுத்தார்.அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கல் விழா வியாழனன்று (மார்ச் 17) சென்னையில் நடைபெற்றது.காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் இந்த விருது இவ்வாண்டு சங்கரய்யா, முன்னாள் வெளியுறவுத் துறை துணைச்செயலரும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் துணைத்தூதராக பணியாற்றிய பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சையத் ஷஹாபுதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.சென்னை, மேடவாக்கம், காயிதே மில்லத்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ஏற்புரையாற்றிய சங்கரய்யா மேற்கண்டவாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.“எந்த மதத்தையும் எவரும் பின்பற்றவோ, தங்கள் மதத்தைப் பரப்பவோ உரிமை உண்டு.ஆனால் அரசாங்கம் எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல என்பதே மதச்சார்பின்மைத் தத்துவம். அதற்கு இன்று மதவெறி, சாதி வெறி சக்திகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை முறியடிக்க இளைய சமுதாயம் எழ வேண்டும்,” என்றார் அவர்.
விடுதலைப் போராட்டம் சாதாரணமான போராட்டம் அல்ல. மொழி, மதம் கடந்துபோராடிய மக்களின்அளப்பரிய தியாகங்களால் கிடைத்ததே நாட்டின் சுதந்திரம். பம்பாய் கப்பற்படை கலகத்திற்குப் பிறகு, இனியும் ஆயுதத்தால் இந்தியாவை அடக்கி வைத்திருக்க முடியாது என உணர்ந்து வெளியேற முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. அந்தப் போராட்டத்தில் பல நூறு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய அவர்களது தியாகத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.வீரத்தாலும் தியாகத்தாலும் இந்திய சுதந்திரத்தை அன்று நிலைநாட்டியவர்கள் அன்றைய தேசிய இயக்கத்தினரும் இடதுசாரிகளும்தான். இதைத்தெரிந்துகொண்டு, சுதந்திரத்தைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் கடமை,” என்று அவர் கூறினார்.விடுதலைப் போராட்டத்தின்போது மகாகவி பாரதி, “முப்பது கோடி ஜனங்களுக்கும் பொதுவுடைமைஎன்று பாடினார். முப்பது கோடிப்பேருக்கு தேவைப்பட்ட பொதுவுடைமை இன்று 120 கோடி மக்களுக்குப் பலமடங்காக விரிவாகக் கிடைக்கச் செய்யப் போராட வேண்டும். இந்தியாவை மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக வலுப்படுத்த உறுதியேற்க வேண்டும் என்றும் சங்கரய்யா மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
மதச்சார்பின்மைக்கும் மதவெறிக்கும் இடையே போர் நடக்கிறது
சையத் ஷஹாபுதீன் சார்பில் அவரது மகளும், பீகார் மாநில முன்னாள் சமூக நீதித்துறை அமைச்சருமான பர்வீன் அமானுல்லா விருதினைப் பெற்றுக்கொண்டார். தந்தையின் ஏற்புக் கடிதத்தையும் அவர் வாசித்தார்.“நியாயமற்ற கொள்கைகளை அரசு எந்திரத்தில் புகுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில் வலதுசாரி சக்திகள் தீவிரமாக முயல்கின்றன. அனைத்து மக்களையும்உள்ளடக்கிய ஜனநாயகம், பாகுபாடற்ற குடியரசு ஆகியவற்றுக்கு எதிரான, குறிப்பாகக் கல்வி வளாகங்களில் பன்முகப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு எதிரான அத்துமீறல்கள் நடக்கின்றன.
சிறுபான்மையினர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வலதுசாரி சக்திகள் பிரச்சாரம் செய்வது நாள்தோறும் நடக்கிறது. இதையெல்லாம் தடுப்பதுதான் மத்திய அரசின் கடமைஎன்று ஷஹாபுதீன் தனது செய்தியில் கூறியிருந்தார்.“இந்தியா ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. மதச்சார்பின்மைக்கும் மதவெறிக்கும் இடையே போர் நடக்கிறது.