மக்களவை முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. பி.ஏ.சங்மா என்ற புர்னோ அகிடோக் சங்மா, 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மேகாலாயாவில் பிறந்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், 1988-ஆம் மேகாலயா மாநில முதல்வராக உயர்ந்தார். 1990 வரை அவர் முதல் பதவியை வகித்தார். அதுமட்டு மன்றி 9 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்மா, 11-ஆவது மக்களவையின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், 2004-ஆம் ஆண்டு சோனியாகாந்திக்கு எதிராக சரத்பவா ரோடு சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். எனினும், 2012ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பெற்ற தோல்வியைத் தொடர்ந்து, தேசிய மக்கள் கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். இடையில் கொஞ்சநாள் திரிணாமுல் காங்கிரஸிலும் இருந்தார். தற்போது தூரா மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி தில்லியில் சிகிச்சை பெற்று வந்த சங்மா, வெள்ளியன்று காலை காலமானார்.
சங்மாவின் மறைவை, தற்போதைய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வெள்ளியன்று அறிவித்தார். மேலும் சங்மாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாகவும் அவர் அறிவித்தார். முன்னதாக, அவையை புன்னகையுடன் சுமுகமாக நடத்துவது எப்படி என்பதை சங்மாவிடமே தான் கற்றுக் கொண்டதாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக சங்மா அயராது உழைத்தவர் என்று புகழஞ்சலி செலுத்தினார்.சங்மா மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப் பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment