அருமைத் தோழர்களே ! கிளைகள் தோறும் கூட்டம் என்ற அடிப்படையில் கடந்த 19-03-16 அன்று நமது கம்பம் & பாளையம் கிளைகள் சார்பாக 7 வது சங்க அங்கீகார தேர்தல் சிறப்பு கூட்டம்... தோழர் எஸ். ராஜன் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இரு கிளைகளிலும் இருந்து பெருவாரியான தோழர்கள் கூட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர். கிளைச் செயலர்கள் எ. அன்புராஜா, எம். பிச்சைமுத்து இருவரும் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய யுக்திகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மாவட்ட சங்கத்தின் சார்பாக கலந்து கொண்ட தோழர் டி.கே. சீனிவாசன் தனது உரையில் மத்திய, மாநில, மாவட்ட சங்க முடிவுகளை விளக்கியதோடு தேர்தலில் நமது BSNLEU சங்கம் தொடர் வெற்றியை ஈட்டுவது உறுதியாக இருந்தாலும், அதிகபட்ச வாக்குகளை பெற்று 51 சதத்திற்கு மேல் வாக்குகள் பெறுவதற்கு அனைவரும் களப்பணி ஆற்ற வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இறுதியாக தோழர். ஆர். சுப்பிரமணியன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.வாழ்த்துக்களுடன், S.சூரியன் - D/S-BSNLEU.
No comments:
Post a Comment