Thursday, 17 March 2016

மல்லையாவுக்கு நெருக்கடி முற்றுகிறது: 4 பிணையில்லாத சம்மன் அனுப்பியது நீதிமன்றம்

ஹைதராபாத்தில் உள்ள எராமஞ்சில் நீதிமன்றம் நேற்று விஜய் மல்லையாவுக்கு நான்கு பிணையில்லாத சம்மன் அனுப்பியுள்ளது. ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2 கோடியில் செக் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையா ஆஜராகாததை தொடர்ந்து அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்டுள்ளது.இது பற்றி விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் ஹெச். சுதாகர் ராவ் கூறுகையில்,2 கோடி ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்பாக நான்கு பிணையில்லாத சம்மன் நேற்று வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாகவும் பிணையில்லாத சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம். மேலும் இந்த பிணையில்லாத சம்மனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இபிஎஃப்ஓ விசாரணை.இதற்கிடையே கிங்பிஷர் நிறுவனம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்துள்ள முறைகேடுகள் குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று தொழிலாளர் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்ப்பாக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.செப்டம்பர் 2015க்கு பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிலுவைகள் குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற் கொள்ள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 7.62 லட்சம் நிலுவை வைத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் இந்த நிலுவையை செலுத்த வேண்டும் என இது தொடர்பாக ஆணையம் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது தொடர்பாக நிறுவனத் துக்கு அனுப்பியுள்ள அறிக்கை யில் அபராதம் (ரூ.3,34,016) மற்றும் வட்டி நிலுவை (ரூ.3,55,678) மற்றும் குறுகிய காலத்தில் செலுத்த வேண்டிய தொகையை காலம் தாழ்த்துவதற்கான கட்டணம் (ரூ.71,910)உள்ளிட்ட வற்றை உடனடியாக கட்ட வேண்டும் என அறிக்கை அனுப்பியுள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகையின் மதிப்பு ரூ.7,61,604 என்று அமைச்ச அறிக்கை குறிப்பிட்டுள்ளது.விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முயற்சித்து வந்தன. அமலாக்கத்துறை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் தற்போது உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து மார்ச் 2 வெளியேறிவிட்டார்.கடைசியாக மேற்கொண்ட ஆய்வில் நிறுவனம் 2012 டிசம்பர் வரை சம்பளம் மற்றும் இதர நிலுவைகள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகளை செலுத்தியுள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 6,185 பணியாளர்களுக்கான பிஎப் பணத்தை மார்ச் 2012 வரை செலுத்தியுள்ளது.ஜனவரி 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பணியாளர் களின் எண்ணிக்கையை 2012 டிசம்பருக்கு பிறகு குறைத்த நிறுவனம் செயல்பாடுகளையும் நிறுத்தியது. அதற்கு பிறகு செப்டம்பர் 2015 வரை மிக குறைந்த அளவில் 2 நிர்வாக பணி யாளர்களுக்கான கட்டணங்களை மட்டும் செலுத்தியுள்ளது.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணியாற்றிய இறந்த 12 பணியாளர்கள் உட்பட 5675 பணியாளர்கள் பிஎஃப் கிளைம் செய்துள்ளனர் என்று அமைச்சக அறிக்கை கூறியுள்ளது. எனிலும் கிங்பிஷர் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள்/ தொழிலாளர்கள் அமைப்புகள் போன்றவற்றிடமிருந்து தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவை தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் இல்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

No comments: