Thursday 31 March 2016

01-04-2016 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே! நமது மத்திய சங்க அறைகூவலுக்கு இணங்க 
01-04-2016 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் . . .
தொழிலாளி கை ஏந்தும் பிச்சைக்காரன் அல்ல
நமது பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு PLI கமிட்டி உறுப்பினர். அவர் நேற்று 30-03-2016 அன்று அகமதாபாதிற்கு தேர்தல் பிரச்சாரம் சென்றிருந்தபோது PLI கமிட்டி கூட்டம் நேற்று மதியம் 3 மணிக்கு அதன் கன்வீனரால் கூட்டப்பட்டது. NFTE தலைவர் தோழர். இஸ்லாம் அகமது அதன் மற்றொரு உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்றார். நிர்வாகம் ரூ.10 முதல் ரூ.99 வரைதான் போனஸ் தர முடியும் என்று கூறியுள்ளதாகவும் அதனை இஸ்லாம் அகமது ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. NFTE CHQ இணையதளத்திலும் மிகக் குறைவான போனஸ் தர நிர்வாகம் முன் வந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு மேனேஜ்மெண்ட் கமிட்டிக்கு செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதான் NFTEயின் செயல்பாடு..எங்கும் எதிலும்LOW-QUOTATION. 
நம் பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு இந்த முடிவை ஏற்க முடியாது என்றும், இதனை எதிர்த்து BSNLEU போராடும் என்றும் CMDயிடம் கூறியுள்ளார். எனவே குறைந்த போனஸ் கேட்டு நாளை 01-04-2016 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. மேலும் 07-04-2016 அனறு ஒரு நாள் தார்ணா போராட்டம் நடத்தவும் அறைகூவல் விடப்பட்டுள்ளது. அணிதிரள்வோம் போராடுவோம்.   NFTE-நிர்வாகத்தின் கூட்டு சதியை முறியடிப்போம்... 
LOW-QUOTAION,NFTE
10-05-2016அன்றுதோற்கடித்து தொழிலாளிக்காக போராடும் BSNLEUவை வெற்றி பெறச் செய்வோம். 01-04-16 அன்று மதுரை G.M.அலுவலகத்தில் மதியம் ஒரு மணிக்கு நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

No comments: