அருமைத் தோழர்களே ! 10-05-2016 அன்று நடைபெற உள்ள 7வது சங்க அங்கீகார தேர்தலில் தொடர்ந்து No. 1 சங்கமாக BSNLEU சங்கம், 51 சதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று ஊழியர்களின் ஏகோபித்த ஆதரவினை பெறும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை என்ற செய்தியை பறை சாற்றும் வண்ணம் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட 28-03-15 விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரை வாடிக்கையாளர் சேவை மைய மணமகிழ் மன்றத்தில், BSNLEU மாவட்டத்தலைவர் தோழர் சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில், தோழர்.எ. பாபு ராதாகிருஷ்ணன் , மாநிலச் செயலர் துவக்க உரையுன், தோழர்.எஸ். செல்லப்பா அகில இந்திய உதவிச் செயலர் சிறப்புரையுடன் செயற்குழு வெற்றிக்கு கட்டியம் கூறியது ....
செயற்குழுவில் அறிக்கையின் அறிமுக உரையோடு வந்திருந்த அனைவரையும் வரவேற்று மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் பேசினார். அதன் பின் விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே மறைந்த ஒட்டன்சத்திர ஒப்பந்த ஊழியர் தோழர். கே. இலட்சுமணன் குடும்ப நிவாரண நிதியாக (தமிழ் மாநில சங்கத்தின் நிதி ரூபாய் 5 ஆயரத்தையும் சேர்த்து )ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டது .

விவாதத்திற்கு பின், SNATTA மதுரை மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர். சாத்தையா அவர்களும், தமிழ் மாநில SNATTA மாநிலச் செயலர் தோழர்.P. அழகு பாண்டிய ராஜா BSNLEU மாநில சங்க அமைப்பு செயலர். பி . சந்திர சேகர், மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா மற்றும் TNTCWU என். சோணைமுத்து, ஆகியோரின் வாழ்த்துரைக்கு பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது,
No comments:
Post a Comment