Sunday 13 March 2016

13-03-16 SNATTA மாநில செயற்குழுவில் நமது வாழ்த்து...

அருமைத் தோழர்களே ! 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில், நமது BSNLEU சங்கத்துடன் இணைந்து பணியாற்ற  SNATTA சங்கம், நமது பொதுச் செயலர், தோழர் பி. அபிமன்யு அவர்களும், SNATTA  பொதுச் செயலர் தோழர், அனுப் முகர்சி   ஆகியோர் இடையே இரு சங்கங்களுக்கு தேர்தல் கூட்டு  ஒப்பந்தம் உருவாகியுள்ள சூழ்நிலையில் மதுரை CTMX மன மகிழ் மன்றத்தில் 13-03-16 அன்று நடைபெற்ற  SNATTA தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நமது BSNLEU  மாவட்ட சங்கத்தின் சார்பாக, மாவட்டத்தலைவர் தோழர்,சி. செல்வின் சத்தியராஜ், மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் ஆகிய இருவரும் நேரடியாக சென்று வாழ்த்துக் கூறியதோடு தேர்தலை இணைந்து சந்திக்க அழைப்பு விடுவிக்கப் பட்டது. SNATTA சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர்.பி. அழகு பாண்டியராஜா, இந்திய முழுவதும் கிட்டத்தட்ட 10000-க்கும் மேற்பட்டSNATTA உறுப்பினர்கள் BSNLEU சங்கத்தின் வெற்றிக்கு வாக்களிப்பார்கள் என, உறுதியளித்தார். மதுரையில் தொடர்வெற்றியை உறுதி படுத்துவோம். நம்மை வாழ வைத்த BSNLEU சங்கத்திற்கு வாக்களிப்பது நமது வர்க்க கடமையாகும் .

No comments: